Crime: த்ரூத் ஆர் டேர் விளையாட்டு.. முத்த வீடியோ.. போலீஸார் பதிந்த போக்சோ வழக்கு..
மங்களூருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரபல கல்லூரி மாணவர்கள் இருவரும் முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மங்களூருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரபல கல்லூரி மாணவர்கள் இருவரும் முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மங்களூரு நகரில் உள்ள தனியார் இல்லத்தில் முத்தமிடும் சவாலை நடத்தியது தொடர்பாக 8 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவர்கள் அந்த குடியிருப்பை இரண்டு மாதங்களுக்கு முன் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தங்கள் காதலிகளை ’த்ரூத் ஆர் டேர்’ என்ற விளையாட்டிற்கு அழைத்துச் சென்று அதன் மூலம் மைனர் பெண்களை கட்டிபிடித்து முத்தமிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பரவியதை தொடர்ந்து பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. கல்லூரிச் சீருடையில் மாணவ, மாணவி இருவர் முத்தமிடுவது வீடியோவில் பதிவான அதே நேரத்தில் அவர்களது நண்பர்கள் முத்தமிட்ட இருவரையும் உற்சாகப்படுத்தினர். மேலும், மாணவிகளும் இந்த விளையாட்டில் முத்தப் போட்டி நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மங்களூரு பாண்டேஸ்வரா மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவைப் படம்பிடித்து வைரலாக்கிய மாணவர்களில் ஒருவர், முதலில் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் விசாரணை தொடர்பாக மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் விசாரிக்கவுள்ளனர். மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மங்களூரு நகர காவல் ஆணையர் என்.சஷிகுமார் கூறியதாவது, ”மங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6 மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. லிப்-லாக் போட்டியின்போது மாணவர்கள் ’த்ரூத் ஆர் டேர்’ விளையாட்டை விளையாடினர்.
அங்கிருந்த மாணவர் ஒருவன் ஒரு வாரத்திற்கு முன்பு அந்த வீடியோவை வாட்ஸ்அப்பில் போட்டிருந்தார். இது பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததால், அதிகாரிகள் மாணவர்களை எச்சரித்து இடைநீக்கம் செய்துள்ளனர். மேலும் மாணவர்கள் போதைப்பொருள் உட்கொண்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றோம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்