மேலும் அறிய
Advertisement
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை
ரவிச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து 22 ஆண்டுகள் சிறையில் அடைக்க திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காக நாடு முழுவதும் மகிளா நீதிமன்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளை மகிளா நீதிபதிகள் விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (27). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடைப்படையில் ரவிச்சந்திரனை கைதுசெய்து வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் ரவிச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து 22 ஆண்டுகள் சிறையில் அடைக்க திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு ரூபாய் முப்பதாயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளி ரவிசந்திரனுக்கு தண்டனை பெற்று தந்த மகளிர் காவல் துறையினரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டினார். மேலும் இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும், அப்படி புகார் அளிப்பவர் பெயர் மற்றும் விலாசம் ஆகியவை ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் புகாருக்கு ஆளாக்கப்படும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்வார்கள், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion