Crime : உடலுறவுக்கு மறுப்பு.. எப்போதும் செல்போன்! மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!
கர்நாடகாவில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்று புதைத்துவிட்டு காணவில்லை என்று நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
![Crime : உடலுறவுக்கு மறுப்பு.. எப்போதும் செல்போன்! மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்! Man kills wife for refusing sex dumps body in Shiradi karnataka Crime : உடலுறவுக்கு மறுப்பு.. எப்போதும் செல்போன்! மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/17/fde70809dec6c01edf64a52266a638671660700443199102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெங்களூரில் உள்ள மடிவாலா மாருதி நகரைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ். பீகாரில் உள்ள சீதாமர்ஹியை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 15 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 5-ந் தேதி பிரிதிவிராஜ் மடிவாலா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த புகாரில், “தனது மனைவி பெயர் ஜோதிகுமாரி. பீகாரில் உள்ள சீதாமர்ஹி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். எங்கள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த நான்கு மாதங்களாக பெங்களூரில் வசித்து வருகிறோம். கடந்த 3-ந் தேதி முதல் தனது மனைவியை காணவில்லை” என்றும், கண்டுபிடித்து தருமாறும் கூறியிருந்தார்.
பிரிதிவிராஜ் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் அவரது மனைவி குறித்து தீவிரமாக விசாரித்தபோது அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. போலீசாரின் விசாரணையில் ஜோதிகுமாரியை பிரதிவிராஜ் திருமணம் செய்தபோது அவருக்கு 28 வயது என்று கூறி திருமணம் செய்து வைத்ததும், ஆனால் ஜோதி குமாரியின் உண்மையான வயது 38 என்பதையும் கண்டுபிடித்தனர். மேலும், இந்த விவகாரம் தெரிந்த பிரதிவிராஜ் மனைவி ஜோதிகுமாரியிடம் அடிக்கடி சண்டையிட்டதும், பின்னர் அதை மன்னித்ததும் தெரியவந்தது.
ஆனாலும், ஜோதிகுமாரி கணவன் பிரிதிவிராஜ் உடன் உடலுறவில் ஈடுபட மறுப்பு தெரிவித்துள்ளார். பிரிதிவிராஜ் பலமுறை கேட்டும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஜோதிகுமாரி எப்போதும் செல்போனிலே பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால், ஜோதிகுமாரியின் நடவடிக்கையில் பிரிதிவிராஜிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜோதிகுமாரிக்கு இன்னொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதால்தான் தன்னுடன் உடலுறவில் ஈடுபட மறுப்பு தெரிவிக்கிறார் என்று பிரிதிவிராஜ் சந்தேகம் அடைந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பிரிதிவிராஜ் தனது மனைவி ஜோதிகுமாரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு உதவியாக தன்னுடைய நண்பரான பீகாரில் உள்ள சமீர்குமாரை அழைத்துள்ளார். இதன்படி, ஜோதிகுமாரியும், பிரிதிவிராஜூம் ஜோடியாக உடுப்பியில் உள்ள மால்பேவிற்கு சென்றுள்ளனர்.
கடந்த 1-ந் தேதி அவர்கள் மால்பே சென்றுவிட்டு பெங்களூர் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சமீரும் சென்றிருந்தார். அப்போது, கார் ஷீரடிகாட் அருகே வந்து கொண்டிருந்தபோது ஜோதிகுமாரி அணிந்திருந்த துப்பட்டா மூலமாக அவரது கழுத்தை பிரிதிவிராஜிம், சமீரும் இணைந்து நெரித்துள்ளனர். இதனால், சம்பவ இடத்திலே உயிரிழந்த ஜோதிகுமாரியை அங்கே இருந்த காட்டில் புதைத்துள்ளனர். பின்னர், எதுவும் நடக்காதது போல பெங்களூருக்கு திரும்பியவுடன் போலீசில் பிரிதிவிராஜ் புகார் அளித்துள்ளார். போலீசார் பிரிதிவிராஜை கைது செய்ததுடன், ஜோதிகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உடலுறவுக்கு மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Junior Artist Raj: 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சினிமா துணை நடிகர்... போக்சோ சட்டத்தில் கைது!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)