திருவாரூரில் காவல் நிலையம் முன் தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த நான்கு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மானந்தாங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் 36 வயதான சுதாகர் தனக்கு ஏற்பட்ட இருதய பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி சுதாவின் அண்ணனான பிரசாந்த் என்பவரிடம் 1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு உடல்நிலை சரியான பிறகு இந்த பணத்தை திருப்பித் தரும்படி பிரசாந்த், சுதாகரிடம் அடிக்கடி கேட்ட நிலையில் வாங்கிய ஒரு லட்சத்தை தவனை முறையில் கொடுத்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் 90 ஆயிரம் பணத்தை சுதாகர் திருப்பிக் கொடுத்த நிலையில் மீதமுள்ள 10 ஆயிரம் பணத்தை கொடுக்க வேண்டும் என பிரசாந்த் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. சுதாகர் கொடுக்க வேண்டிய 10,000 ரூபாய் பணத்தில் பிரசாந்த் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது கணவரை பிரசாந்த் தாக்கி விட்டதாகவும் கூறி சுதாகரின் மனைவி சுதா பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த புகார் குறித்து பேரளம் காவல் நிலையத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விசாரிப்பதற்காக கடந்த மார்ச் 31 ஆம் தேதி காவல் நிலையத்திற்கு தனது மனைவியடன் வந்த சுதாகர் பேரளம் காவல் நிலைய வளாகத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் 80 சதவீத தீக்காயங்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த நான்கு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் சுதாகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மைத்துனரான அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவரை பேரளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சுதாகர் தீக்குளித்து மருத்துவமனை வைக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பிரசாத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றப்பட்டு பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.காவல்துறையினர் தனது புகழுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல் நிலைய வளாகத்திலேயே வாலிபர் தீக்குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுதாகரின் இறுதிச்சடங்கை முன்னிட்டு அவரது வீடு மற்றும் கிராமத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.