Crime: பிறப்புறுப்பில் குத்தி, கண்களை பிடுங்கி, மனைவி மீது கொடூர தாக்குதல் - கணவன் ஆத்திரத்திற்கான காரணம் என்ன?
Crime: கத்தியால் குத்தி கண்களை பிடுங்கி மனைவியை கணவனே கொடூரமாக தாக்கிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

Crime: மனைவியின் அந்தரங்க பாகங்கள் உட்பட பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியதாக கணவன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்:
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில், தனது மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்த, கணவர் அந்த பெண்ணை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அந்த நபர் கத்தியால் குத்தி, மனைவியின் இரு கண்களையும் பிடுங்கி எறிந்ததாகவும், அவரது அந்தரங்கப் பகுதிகள் உட்பட பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
புதன்கிழமை போஹ்ரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சோட்டு கான் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் தனது மனைவியின் மொபைல் போனை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால், கத்தியை கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அடிக்கடி அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, மனைவியைத் தாக்கிய பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிர சிகிச்சை பிரிவில் பெண்:
பாதிக்கப்பட்ட பெண் அலறல் சத்தக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த பிறகுதான், அவர் இரத்த வெள்ளத்தில் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து தற்போது போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில், தலைமறைவான கணவரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.
மனைவியை பழிவாங்கிய கணவன்:
இதனிடையே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் சிறையில் இருந்து வெளியே வந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகளைக் கொன்றுவிட்டு, வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் டீசல் என்ஜின் உதவியாளராக பணிபுரிந்த அந்தப் பெண், தனது முதல் கணவரின் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இரண்டாவது கணவர் மீது புகாரளித்தார். அதன் பிறகு, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே அந்த நபர் இருவரையும் கொலை செய்துள்ளார். இறந்தவர்கள் ஜூலி தேகா, அவரது 15 வயது மகள் மற்றும் லோஹித் தாகுரியா (47) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

