மேலும் அறிய

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!

திண்டிவனத்தில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரை ஏமாற்றி ஏடிஎம் கார்டை மாற்றித் தந்து ரூ.19,500 பணத்தைச் சுருட்டிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை திண்டிவனம் நகர காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரை ஏமாற்றி ஏடிஎம் கார்டை மாற்றித் தந்து ரூ.19,500 பணத்தைச் சுருட்டிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை திண்டிவனம் நகர காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகள், ரொக்கப் பணம் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கோட்டைமேடு, செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (90). ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர், திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அவருக்கு வயது முதிர்வு காரணமாக ஏடிஎம் இயந்திரத்தை இயக்குவதில் சிரமம் இருந்ததால், அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுத்துத் தருமாறு உதவி கேட்டுத் தனது ஏடிஎம் கார்டைக் கொடுத்துள்ளார்.

தந்திரமாக நடந்த மோசடி:

அந்த வாலிபர், முதியவருக்கு உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் செலுத்தியுள்ளார். அப்போது, முதியவர் ரகசிய எண்ணை (PIN) உள்ளீடு செய்வதை நைசாகக் கவனித்துக் கொண்ட வாலிபர், கணக்கில் பணம் இல்லை என்று பொய்யான தகவலைக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, முதியவருக்குத் தெரியாமல் அவரிடமிருந்த உண்மையான ஏடிஎம் கார்டை வைத்துக்கொண்டு, தன்னிடம் இருந்த போலி ஏடிஎம் கார்டை முதியவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளார்.

குறுஞ்செய்தியால் அம்பலமான உண்மை:

முதியவர் ஏடிஎம் மையத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே, அவரது செல்போனுக்குப் பணம் எடுக்கப்பட்டதாக அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் (SMS) வரத் தொடங்கின. வெவ்வேறு ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.3,500, ரூ.6,000 மற்றும் ரூ.10,000 என மொத்தம் ரூ.19,500 பணம் எடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர், உடனடியாக வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு தனது வங்கிக் கணக்கை முடக்கினார்.

மேலும், இச்சம்பவம் குறித்து திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் அவர் உடனடியாகப் புகார் அளித்தார்.

சிசிடிவி ஆய்வு & அதிரடி கைது:

புகாரின் பேரில் திண்டிவனம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஏடிஎம் மையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசலு (36) என்ற நபர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வெகுநேரமாகச் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தினர்.

100-க்கும் மேற்பட்ட கார்டுகள் பறிமுதல்:

போலீசார் நடத்திய சோதனையில், சீனிவாசலுவிடம் 100-க்கும் மேற்பட்ட போலி மற்றும் பிறரின் ஏடிஎம் கார்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தீவிர விசாரணையில், முதியவர் சீனிவாசனை ஏமாற்றி கார்டை மாற்றி ரூ.19,500 பணத்தைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்த ரூ.19,500 ரொக்கப் பணம், செல்போன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகளைப் பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். முதியவரிடம் மோசடி செய்த நபரை விரைந்து கைது செய்த காவல்துறையினரின் நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget