தமிழகம் முழுவதும் சொத்துகள்.. லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி சொத்துகள் முடக்கம்!
தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூபாய் 173 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின். இவருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. இந்த நிலையில், லாட்டரி மார்டினுக்கு சொந்தமான ரூபாய் 173 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கோவையச் சேர்ந்தவர் சான்டியாகோ மார்ட்டின், லாட்டரி விற்பனை மூலம் கொடிகட்டிப் பறக்கும் இவர் மிகப்பெரிய கோடீஸ்வரராக உள்ளார். தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டாலும் அசாம், மேற்குவங்கம், சிக்கிம் என இந்தியாவின் பல மாநிலங்களிலும் இவரது லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்து வருகிறது.
கடந்த 2009-2010ம் ஆண்டில் லாட்டரி விற்பனை மூலம் கிடைத்த ரூபாய் 910.3 கோடி ரூபாய் வருவாயை மறைத்து அதை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் லாட்டரி அதிபர் மார்ட்டின் முதலீடு செய்ததாக இவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், லாட்டரி விற்பனை முறையாக நடக்கும் சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் போலியான கணக்குகள் மூலமும் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது அமலாக்கத்துறையினர் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி வந்தனர். கடந்த 2019ம் ஆண்டில் கூட லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூபாய் 119.6 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூபாய் 136 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கினர்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் லாட்டரி விற்பனை மட்டுமின்றி மில், மால்கள், திரையரங்குகள் என்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில்தான் அவருக்கு சொந்தமான ரூபாய் 173 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மேலும் படிக்க : Madhya Pradesh : அடல்ட் படங்கள், வீடியோ கேம்ஸ் போதை.! ஹெல்ப்லைனில் குவியும் பள்ளி மாணவர்கள்!
மேலும் படிக்க : Service Charge : 20 ரூபாய் தேநீருக்கு ரூ.50 சர்வீஸ் சார்ஜ்? சூடாகி கொதித்து எழுந்த ரயில் பயணி.. அப்புறம் என்ன ஆச்சு?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்