மேலும் அறிய

Crime: குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை - கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் கைது

குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

Crime: குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை - கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை அக்கல்லூரியின் முதல்வரும், அ.தி.மு.க பிரமுகருமான குளித்தலை காவிரி நகரை சேர்ந்த வக்கீல் செந்தில்குமார் பலமுறை பாலியல் தொந்தரவு செய்து, அந்த மாணவியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அக்கல்லூரியின் விடுதி காப்பாளராக பணிபுரியும் அமுதவள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சமையல் மற்றும் பராமரிப்புப் பணி செய்து வந்த மாணவியும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் செந்தில்குமார், அமுதவள்ளி உட்பட 3 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 3 பேரை தேடி வந்தனர்.

Crime: குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை - கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் கைது

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவரான அந்த தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டு சமையலராக இருந்த அக்கல்லூரி மாணவியை அவரது சொந்த ஊரிலேயே குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கடந்த மே மாதம் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பாளர் அமுதவள்ளி ஆகிய 2 பேரையும் குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் செந்தில்குமார் மற்றும் அமுதவள்ளி ஆகிய 2 பேரும் சென்னை மேல்மருவத்தூர் பகுதியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

Crime: குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை - கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் கைது

அதன் பேரில் தனிப்படை போலீசார் மேல்மருவத்தூர் சென்று செந்தில்குமார் அமுதவள்ளி ஆகியோரை குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் செந்தில்குமார் மற்றும் அமுதவள்ளி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Embed widget