மேலும் அறிய

Crime: கார் டிரைவருடன் கனெக்‌ஷன்.. காதலுக்கு தடையாக இருந்த கணவர்: கூலிப்படையை வைத்து கொலை செய்த பெண் எஸ்.எஸ்.ஐ!

கிருஷ்ணகிரி அருகே திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் 48 வயதான செந்தில் குமார். போலீஸ் ஏட்டுவாக பணியாற்றிய இவர், பணி காலத்தின்போது குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு 44 வயதான சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு 19 வயதான ஜெகதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் மூவரும் ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் செந்தில் குமார் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமாரின் தாயார் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை எடுத்துக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே மாயமான செந்தில்குமாரின் செல்போன், அவரது மகனின் செல்போன் இவர்களது கார் டிரைவர் 37 வயதான கமல்ராஜ் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை கடந்த 13 ம் தேதி விசாரணைக்கு அழைத்தனர். 

ஆனால் அவர்கள் யாரும் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் கடந்த 14 ம் தேதி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர். அப்போது அவர்கள் செந்தில்கு மாரை கொலை செய்து தென் பெண்ணை ஆற்றில் உடலை வீசிவிட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பி ரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தினார். மேலும் சேலம் சிறையில் இருந்த ஜெகதீஷ்குமார், கார் டிரைவர் கமல் ராஜ் ஆகிய 2 பேரையும் போலீ சார் சேலம் சிறையில் இருந்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது செந்தில்குமாரை கொலை செய்து உடலை கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து செந்தில் குமாரின் உடலை நேற்று முன் தினம் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் ஜெகதீஷ்கு மார், கமல்ராஜ் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செந்தில்குமாரை அவரது மனைவி சித்ரா கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சித்ரா, பாவக்கல்லைச் சேர்ந்த பெண் சாமியார் சரோஜா என்கிற சரோஜா தேவி (37), கூலிப்படையை சேர்ந்த ஊத்தங்கரை பாரதிபுரம் விஜயகுமார் (21), தூத்துக்குடி மாவட்டம் மாங்குட்டைபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜ பாண்டியன் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் தலைமறைவான கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரையும் போலீ சார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வாக்குமூலம்:

கைதான சித்ரா போலீசில் அளித்த வாக்கு மூலத்தில், ”எனது கணவர் செந்தில்குமார் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அத னால் ஏட்டுவாக இருந்த அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் கடந்த 2008ல் ஒரு காரை வாங்கி அதை வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும் அவர் பணிபுரிந்த காலத்தில் நானும், அவரும் சேர்ந்து ஒரு வீடு வாங்கினோம்.

எனது கணவரிடம் கார் டிரைவராக கமல்ராஜ் என்பவர்வேலை பார்த்தார். முதலில் அவருடன் நான் சாதாரணமாக பழகினேன். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. மேலும் எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது.

எனது கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் கமல்ராஜ் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் அப்போது உல்லாசமாக இருந்து வந்தோம். இதையடுத்து கமல்ராஜ் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து சென்றது எனது கணவருக்கு தெரிய வந்தது. இதனால் அவர் எங்களை கண்டித்தார். ஒருநாள் எனது கணவர் செந்தில்குமார் வீட்டுக்கு வந்தபோது நான் கமல் ராஜூடன் தனிமையில் இருந்தேன்.

இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தார். அதன் பிறகு அவருக்கும், கமல்ராஜூக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக கமல்ராஜ் கொடுத்த புகாரில் எனது கணவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்தார். இதன் பிறகு அவர் வீட்டிற்கு எப்போதாவது வந்து செல்வார்.

கூலிப்படை வைத்து கொலை:

எனக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்ததால் பாவக்கல்லை சேர்ந்த பெண் சாமியார் சரோஜாவை சந்தித்தேன். எனது பிரச்சினைகளை கேட்ட அவர், என்னிடம் கூலிப்படை உள்ளது. ரூ.10 லட்சம் கொடுத்தால் உனக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்து கட்டி விடலாம். யாருக்கும் தெரியாமல் கதையை முடித்து விடுவோம் என்று திட்டம் போட்டு கொடுத்தார்.

இதையடுத்து நான் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் தயார் செய்து பெண் சாமியார் சரோஜாவிடம் கொடுத்தேன். அந்த பணத்தை கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமியிடம் சாமியார் கொடுத்தார். அப்போது நான், எனது கணவரின் கதையை முடித்து விடுங்கள். இதில் நான் சம்பந்தப்பட்டது யாருக்கும் தெரிய கூடாது என்று கூறினேன்.

கிணற்றில் போட்டோம் அதன்படி சம்பவத்தன்று செந்தில்குமாரை கொன்று எனது மகன் ஜெகதீஷ்குமார் மூலம் வீட்டு கிணற்றில் போட்டோம்.

இதனால் போலீசார் எனது கணவர் மாயமான வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணை தீவிரமடைந்ததால் என் மீது சந்தேகம் வராமல் இருக்க எனது கள்ளக்காதலன் மற்றும் எனது மகனை கோர்ட்டில் சரண் அடைய சொன்னேன். அதன்படி அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்த வழக்கில் போலீசார் எங்கள் அனைவரின் செல்போன் உரையாடல்கள், நாங் கள் யாருடன் எல்லாம் பேசி உள்ளோம் என்பதை ஆராய்ந்து முதலில் பெண் சாமியார் சரோஜாவை கைது செய்தனர். அவர் நடந்த சம்பவங்களை கூறிய தால் நாங்களும் மாட்டிக் கொண்டோம்” இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் அளித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget