திருமணத்தை மீறிய தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கணவன் செய்த கொடூரம்.. அதிகரிக்கும் குடும்ப வன்முறை..
ரூபி சரண்ஜித்திடம் அவரது தகாத உறவு பற்றி கேட்கையில், வாக்குவாதம் முற்றி இருக்கிறது. அதனால் அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது மனைவியைக் கொன்றிருக்கிறார்.
கரார் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தகாத உறவு வைத்திருந்தை கண்டுபிடித்த தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை சண்டிகர் மாநிலத்தில் மொரிண்டா அருகே உள்ள கால்வாயில் வீசியுள்ளார். கணவர் திருமணம் தாண்டிய உறவு வைத்திருந்ததை மனைவி தெரிந்துகொண்டதால் அவரை கொலை செய்திருக்கிறார் என்று கைது செய்த போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் கரார் மாவட்டத்தின் பல்லோமஜ்ராவில் வசிக்கும் சரஞ்சித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ரூபி பாண்டே என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.
பாதிக்கபட்ட ரூபி பாண்டே, தனது கணவர் சரண்ஜித் மற்றும் ஒரு வயது மகனுடன் காரரில் உள்ள ஈகோ ஃப்ளோர்ஸ் 1 சொசைட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சண்டிகரில் உள்ள செக்டார் 45 ஐச் சேர்ந்த ரூபி பாண்டே மார்ச் 9 ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. காரார் காவல் நிலையப் பொறுப்பாளர் சதீந்தர் சிங் கூறுகையில், "ரூபியின் சகோதரி சமீபத்தில் ரூபி காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார், அதைத் தொடர்ந்து சரண்ஜித் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்." என்று கூறியிருக்கிறார்.
சரண்ஜித் விசாரணையில், லூதியானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருப்பதை மனைவி தெரிந்துகொண்டார், அதனால் தனது மனைவியைக் கொன்றேன், என ஒப்புக்கொண்டார். மார்ச் 9 அன்று, ரூபி சரண்ஜித்திடம் அவரது தகாத உறவு பற்றி கேட்கையில், வாக்குவாதம் முற்றி இருக்கிறது. அதனால் அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது மனைவியைக் கொன்றிருக்கிறார். கொலை செய்த பின்னர், உடலை மறைத்து செய்த குற்றத்தை மூடி மறைக்க முயற்சி செய்துள்ளார். எனவே அவர் மொரிண்டாவுக்குச் சென்று அவரது மனைவியின் உடலை கான்ட் மான்பூர் கால்வாயில் வீசி உள்ளார்.
பலியானவரின் உடலைக் கண்டுபிடிக்க கால்வாயில் குதித்ததுதான் தேட வேண்டும் என்கிற சூழ்நிலை உருவானதும், சண்டிகர் போலீசார் நீச்சல் வீரர்களை இதற்காக பிரத்யேகமாக அழைத்து வந்து தேடியுள்ளனர். பல மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடலைக் கண்டுபிடித்து பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். சரண்ஜித் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (இபிகோ) 302 (கொலைக் குற்றம்), 120-பி (குற்றச் சதி) மற்றும் 201 (குற்றச் சான்றுகளை காணாமல் போகச் செய்தது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் வியாழக்கிழமை மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தனது சுயநலத்திற்காக மனைவியை கொள்ள நினைத்த சரண்ஜித்திற்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.