மேலும் அறிய

மனித மாமிசத்தை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட கொடூரம்....கேரளாவில் மூட நம்பிக்கையின் உச்சம்..!

கேரளாவில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் வெளிவரும் அதிர்ச்சி தகவல் - மனித மாமிசத்தை துண்டு துண்டாக வெட்டி அவித்து சாப்பிட்ட கொடூரம் மூட நம்பிக்கையின் உச்சம் !

கல்வி அறிவில் முதலிடத்தில் உள்ள கேரள மாநிலத்தில் மூட நம்பிக்கையால் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் ஐஸ்வரியமும், செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பரிய வைத்தியர் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர். நரபலி கொடுத்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
 
எர்ணகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முஹம்மது ஷாஃபி போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த அக்கவுண்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் உள்ள வைத்தியர் பகவல் சிங்கை தொடர்புகொண்டார். அப்போது ஐஸ்வர்யம் பெருகவும், செல்வம் செழிக்கவும் வழிகாட்டப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அதற்கு ஒரு பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று அந்த இடங்களை பார்வையிட்டுவிட்டு ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் என கூறியதுடன், அந்த பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் முஹம்மது ஷாஃபி கூறியுள்ளார்.
 
முஹம்மது ஷாஃபி எர்ணாகுளம் சென்று காலடி பகுதியில் தனியாக வாடகைக்கு வசித்து வந்து, கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்து வந்த ரோஸ்லி(59)-க்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறி திருவல்லா அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்று இரவு நேரத்தில் நரபலி பூஜையை செய்துள்ளனர். கட்டிலில் கிடத்தி கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டு முதலில் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் உடலை சுமார் 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர். உடலை வைத்து சில பூஜைகள் செய்துள்ளனர். பூஜை முடிந்த பிறகு வீட்டிற்கு வெளியே துணி துவைக்கும் கல் அமைந்துள்ள பகுதியில் குழிதோண்டி உடலை புதைத்து, அதன் மீது மஞ்சள் நட்டு வைத்துள்ளனர்.
 
முதல் பூஜையால் பலன் கிடைக்காததால் மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக்கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்தனர். கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்து வந்த தர்மபுரியைச் சேர்ந்த பத்மா(52) என்ற பெண்ணையும் பணம் கொடுப்பதாக கூறி திருவல்லா அழைத்துச்சென்று ரோஸ்லியை நரபலி கொடுத்தது போன்றே நரபலி கொடுத்துள்ளனர். அவரது உடல்களையும் துண்டுதுண்டாக வெட்டி வீட்டுக்கு வெளிப்பகுதியில் புதைத்துள்ளனர்.
 

மனித மாமிசத்தை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட கொடூரம்....கேரளாவில் மூட நம்பிக்கையின் உச்சம்..!
 
ரோஸ்லியை காணவில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அவரது மகள் மஞ்சு புகார் அளித்தார். அந்த விசாரணையில் பெரிய அளவில் துப்பு துலங்கவில்லை. பத்மாவை காணவில்லை என அவரது மகன் செல்வராஜ் கடந்த மாதம் 27-ம் தேதி புகார் அளித்தார். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அது திருவல்லா பகுதியில் கடைசியாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் சி.சி.வி.டி வி காட்சிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து பத்மாவை கடத்திய முஹம்மது ஷாஃபி முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பெண்கள் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.
 
இதையடுத்து பாரம்பரிய வைத்தியர் பஜவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ரோஸ்லி, பத்மா ஆகியோரது உடல் துண்டுகள் தேடி எடுக்கப்பட்டன. அவர்களது உடலை அடையாளம் காணும் விதமாக டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக கோட்டயம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் அவர்களது உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த வழக்கின் தொடர் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
ரோஸ்லின், பத்மா ஆகிய இருவரையுமே வெவ்வேறு நாட்களில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி முகமது ஷாஃபி, தம்பதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சினிமா ஷூட்டிங் நடைபெறுவதாக கூறி அவர்களை ஆடைகள் இல்லாமல் கட்டிலில் கட்டி வைத்து, சுத்தியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து இருவரின் சடலங்களையும் 60க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி அவித்து சாப்பிட்டுள்ளனர். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷாஃபி இதை செய்ய வைத்துள்ளார். பின்னர் இரு பெண்களின் அந்தரங்க பகுதியில் கத்தியால் கிழித்து அந்த ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த கேரளத்தையும் கதிகலங்க செய்துள்ளது. பண ஆசைக்காக இரு பெண்களை மூடநம்பிக்கைக்காக நரபலி என்ற பெயரில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிருகத்தனத்தின் உச்சம்.
 

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget