Crime: ஓடும் பேருந்தில் நடிகையிடம் சில்மிஷம்.. சிக்கிய தாடிக்கார இளைஞர்... என்ன நடந்தது?
கேரளாவில் ஓடும் பேருந்தில் நடிகை ஒருவரிடம் ஆபாச செய்கை செய்ய முயன்ற இளைஞரை, சக பயணிகள் போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஓடும் பேருந்தில் நடிகை ஒருவரிடம் ஆபாச செய்கை செய்ய முயன்ற இளைஞரை, சக பயணிகள் போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுபோக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் சொல்லி மாளாது. ஆபாச செய்கை செய்வது, பிறர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது என ஏகப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளவே செய்கிறார்கள். இத்தகைய செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான தண்டனைகளும் கொடுக்கப்படுகிறது. இப்படியான நிலையில் கேரளாவில் ஓடும் பேருந்தில் நடைபெற்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி திருச்சூரில் இருந்து கொச்சிக்கு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதில் நடிகையும், மாடல் அழகியுமான நந்திதா சங்கரா என்ற பெண்ணும் பயணம் செய்துக் கொண்டிருந்தார். மூன்று பேர் அமர்ந்து கொள்ளும் இருக்கையின் நடுவில் உள்ள இடம் காலியாக இருந்துள்ளது. ஒரு பக்கம் நந்திதாவும், மற்றொரு பக்கம் இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். அப்போது கோழிக்கோட்டைச் சேர்ந்த சவாத் ஷா என்ற நபர் அங்கமாலியில் ஏறியுள்ளார்.
அவர் நந்திதாவுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் நடுவில் அமர்ந்து பயணித்துள்ளார். அந்த நபர் ஜன்னல் அருகே நந்திதாவிடம், அவர் எங்கே செல்கிறார் உள்ளிட்ட தகவல்களை கேட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் சவாத் ஷா ஒரு கையால் நந்திதாவின் இடுப்பை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இன்னொரு கையை பிறப்புறுப்பு மீது ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடுப்பான நந்திதா, சிறிது நகர்ந்து அமர்ந்துள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த நபர் சுய இன்பத்தில் ஈடுபட தொடங்க அதைக் கண்டு நந்திதா அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக தனது போனை எடுத்து அந்த நபரை வீடியோ எடுத்ததுடன் கத்தி கூச்சலிட்டு வாக்குவாதம் செய்துள்ளார். உடனே கண்டக்டரிம் நந்திதா புகாரளிக்க, பேருந்து நெடுவாசல் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கீழே இறக்கப்பட்ட சவாத் ஷா கண்டக்டரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனையடுத்து பேருந்தில் பயணித்த சக பயணிகள் விரைந்து சென்று சவாத் ஷாவை துரத்திச் சென்று பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இவை அனைத்தையும் நந்திதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் கண்டக்டர், டிரைவர், புகார் அளிக்க உதவிய ஒரு சட்டக்கல்லூரி மாணவி மற்றும் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் அந்த நபர் அடுத்த முறை ஜிப்பைத் திறக்கும் போது என் முகத்தை நினைத்துப் பயப்பட வேண்டும் என காட்டமாகவும் நந்திதா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.