கரூர்: அரவக்குறிச்சி அருகே பெண் என்ஜினீயர் கிணற்றில் குதித்து தற்கொலை
தந்தை தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், ஒரு தோட்டத்து கிணற்றில் இறந்த நிலையில் பிணமாக மிதந்துள்ளார்.
உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த பெண் என்ஜினீயர் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே எரவநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து மகள் மீனாராணி (வயது 39). பெண் என்ஜினீயரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் என்ஜினியர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீனா ராணியை காணவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று மீனா ராணி எருமநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் இறந்த நிலையில் பிணமாக மிதந்துள்ளார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸ்சாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு அரவக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, மீனா ராணியின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், உடல்நிலை பாதிப்பால் மனம் உடைந்த மீனா ராணி தற்கொலை கொண்டது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்