கரூரில் அதிர்ச்சி.. மேய்ச்சலுக்காக காட்டில் விட்டுச் சென்ற கறவை மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்ற நபர்கள்
மாடுகளை மீட்ட மாட்டின் உரிமையாளர்கள் போலீசில் கடத்தியவர் 8 பேரை ஒப்படைத்து நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.
கரூரில் மேய்ச்சலுக்காக காட்டில் விட்டுச் சென்ற கறவை மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், உப்பிடமங்களத்தை அடுத்த சேங்கலை சார்ந்தவர் பூங்கொடி. இவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளத் தோட்டம் என்ற இடத்தில் தரிசு நிலத்தை ஒத்திகைக்கு எடுத்து அங்கு 7 கறவை மாடுகளை வளர்த்து வருகின்றார். கடந்த 1 ம் தேதி வழக்கமாக அங்கு வந்த பூங்கொடி மாடுகளுக்கு தீவணங்களை போட்டு மர நிழலில் கட்டுப் போட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மதியம் 3 மணியளவில் மாடுகளை பார்க்க சென்ற போது மாடுகளை காணாமல் போய்விட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது 3 மாடுகளை மினி சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டும், 4 மாடுகளை ஒருவர் கையில் பிடித்துக் கொண்டு நடந்து சென்றதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பூங்கொடி தனது சகோதரியின் உதவியுடன் மீட்டுள்ளார். மேலும், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 8 நபர்களையும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை பிடித்து தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆனால், பெயரளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரவீன் என்கின்ற ரவி என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் தெரிவிக்க மறுப்பதாகவும், மனு ரசீது கூட தர மறுப்பதாகவும் கூறி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். குற்றவாளியின் புகைப்படங்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக காவல் கண்காணிப்பாரிடம் வழங்கினர்.
இதற்கு ஆதரவாக பாரதிதாசன், செந்தாரை தொழிலாளர் சங்கத்தை சார்ந்த நிர்வாகி தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு சென்று கேட்ட போது போலீசார் அவரது 2 செல்போன்களைப் பறித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அவரும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.