குளித்தலை டோல்கேட் பகுதியில் 1.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்
குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குளித்தலை பழைய கோர்ட் தெருவை சேர்ந்த முருகானந்தம் (36), வை.புதூரை சேர்ந்த சூர்யா (19) கஞ்சாவினை பதுக்கி விற்று வந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குளித்தலை பழைய கோர்ட் தெருவை சேர்ந்த முருகானந்தம் (36), வை.புதூரை சேர்ந்த சூர்யா (19) ஆகிய இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவினை பதுக்கி விற்று வந்துள்ளனர்.
இதனைக் கண்ட குளித்தலை போலீசார் அவர்களை சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து 1.100 கிலோகிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் குளித்தலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டத்தில் 159 மது பாட்டில்கள் பறிமுதல் 11 பேர் மீது வழக்கு பதிவு.
கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 17 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து 159 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரண மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன 12 மணி முதல் 10:00 மணிக்கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை உற்பத்தி செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கரூர், வெள்ளியணை, தென்னிலை, தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு, லாலாபேட்டை, மாயனூர், வாங்கல், வேலாயுதம்பாளையம் மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 17 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 159 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மில்லிலிட்டரின் அளவு 29 ஆயிரத்து 590 என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசர்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.