மேலும் அறிய

ஆருத்ரா ஏஜெண்ட்டுக்கு நடந்த விபரீதம்... திருமணத்திற்கு ஆறு நாள் உள்ள நிலையில் தற்கொலை.. தாயும் உயிரிழப்பு.. பின்னணி என்ன?

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தனது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் நேற்று அவரது தாயிற்கு 16ம் நாள் காரியம் நடைபெற்ற நிலையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி செண்பகம் தம்பதியரின் மகன் விஜயபாஸ்கர்.bஇவர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பல லட்ச ரூபாய்களை முதலீடு பெற்று பிரபல நிதிநிதி நிறுவனத்தில் அதனை செலுத்தி முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல நிதி நிறுவனம் மோசடி தொடர்பான  வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் முதலீடு செய்த பொதுமக்கள் அவ்வப்போது விஜயபாஸ்கர் வீட்டுக்கு வந்து பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜயபாஸ்கர் ஆருத்ரா மற்றும் ஐஎஃப்எஸ் ஆகிய நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Aarudra Gold Trading Case dates and centres announced for depositors to return investment ஆருத்ரா கோல்டு டிரேடிங் வழக்கு: டெப்பாசிட்தாரர்கள் முதலீட்டை திரும்பப்பெற முகாம்கள் அறிவிப்பு!

இந்நிலையில் வரும் 1-ஆம் தேதி விஜயபாஸ்கருக்கு  திருமணம் நடைபெற நிச்சயக்கப்பட்ட நிலையில்  பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமலும், தனது திருமணத்திற்கான ஏற்பாடுகளை பணமின்றி செய்யமுடியாமலும், அவ்வப்போது வீட்டில் வந்து பணம் கேட்டதால் மன உளைச்சல் அடைந்த அவரது தாய்  செண்பகம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில், நேற்று அவரது தாய்யின் 16ஆம் தேதி நாள் காரியம் நடைபெற்றுள்ளதாலும் கடும் மன உளைச்சலில் விஜயபாஸ்கர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


ஆருத்ரா ஏஜெண்ட்டுக்கு நடந்த விபரீதம்... திருமணத்திற்கு ஆறு நாள் உள்ள நிலையில் தற்கொலை.. தாயும் உயிரிழப்பு.. பின்னணி என்ன?

இந்நிலையில் கடும்  மன உளைச்சலில் இருந்து வந்த விஜயபாஸ்கர் இன்று பிற்பகல் திடீரென தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த அறிந்த அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து பாலு செட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் விஜய பாஸ்கரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம்  மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயபாஸ்கரின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்திற்கு இன்னும் 6நாட்களே உள்ள நிலையில் நிதி நிறுவன மோசடி  காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும்,அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபாஸ்கரின் தந்தை பிச்சாண்டி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனை அடுத்து சகோதரி மற்றும் தாய் செண்பகத்துடன் வாழ்ந்து வந்த விஜய் பாஸ்கர், 3 ஆண்டுகளுக்கு முன் சகோதரிக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் அவரது தாயுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவரது தாயும் தற்கொலை செய்துக்கொண்ட சோகத்தில்  இன்று விஜயபாஸ்கர்  தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.நிதி நிறுவனத்தில்  பொது மக்களின் பல லட்ச ரூபாய்களை  முதலீடு செய்து அதனை திருப்பி கேட்ட பொது மக்களினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் அடுத்தடுத்து  தற்கொலை செய்துகொண்டது  அப்பகுதி கிராம மக்களிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget