மேலும் அறிய

கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!

ஊத்தங்கரை அருகே உள்ள தோட்டத்து வீடு ஒன்றில் 70 வயதான முதியவரும், அவரின்  60 வயது மனைவியும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு இந்த வீட்டுக்குள் மர்ம கும்பல் ஒன்று புகுந்து முதியவரை தாக்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 60 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள தோட்டத்து வீடு ஒன்றில் 70 வயதான முதியவரும், அவரின்  60 வயது மனைவியும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு இந்த வீட்டுக்குள் மர்ம கும்பல் ஒன்று புகுந்து முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதேசமயம் அங்கிருந்த அவரின் 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நள்ளிரவில் சுற்றிலும் ஆள் அரவமற்ற தோட்டத்து வீட்டில் இந்த சம்பவம் நடந்ததால் தம்பதியினர் கூக்குரலிட்டும் யாரும் வரவில்லை. 

இந்த நிலையில் இன்று காலையில் அந்த பக்கமாக வந்த பொதுமக்கள் முதியவர் இரத்த காயங்களுடனும், மனைவி நிலைகுலைந்தும் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கும், ஆம்புலன்ஸூக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸில் ஊத்தரங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முதியவர் உயிரிழந்து விட்டார். மூதாட்டிக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாட்டில் சமீபகாலமாக பெண்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் தண்டனைகள் கடுமையாக இருந்தாலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. நாமக்கலில் வீட்டி வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் 60 வயது மூதாட்டியும் வன்புணர்வுக்கு ஆளானது பெண்கள் பாதுகாப்பு மீதான கேள்விகளை உண்டாக்கியுள்ளது. விரைந்து மாநில அரசு இதுபோன்ற குற்றங்களை அடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மற்றொரு சம்பவம்

மத்தியப்பிரதேச மாநிலத்திலும் 90 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த மூதாட்டி தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். அப்போது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று உள்ளே வந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தனது மகளை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் காவல்துறையில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget