'பல்சர் பைக்கை மட்டும்தான் திருடுவோம்' : வாண்ட்டடாக வண்டியில் ஏறி சிக்கிய திருடன்.. ஒரு அசால்ட் கதை..
மதுகுடிக்கவும் ஆடம்பர செலவிற்கும் பைக் திருடிய விழுப்புரம் ஆசாமிகள் குடிபோதையில் அதிவேகமாக வந்து போலீசாரிடம் சிக்கினர்
புதுச்சேரி வெவ்வேறு பகுதிகளில் பல்சர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரியில் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட பல்சர் இருசக்கர வாகனங்கள் திருடுபோனது. இதனால் அனைத்து காவல் நிலைய போலீசாரும் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு புதுச்சேரி 100 அடி சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சிறப்பு அதிரடி படை போலீசார் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது போதையில் இருசக்கர வாகனத்தில் தாறுமாறாக அவ்வழியே வந்த இருவரை நிறுத்தி இருசக்கர வாகனத்திற்கான உரிய சான்றிதழ்களை கேட்டபோது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.
கணவர் திருடிய நகை, பணத்தை உரிமையாளரிடம் திரும்ப கொடுத்த மனைவி!
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் இருவரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (38), சிலம்பரசன் (37), இவர்கள் ஒட்டி வந்தது திருட்டு வாகனம் என கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு கூலித்தொழில் செய்ய வரும் இவர்கள் நகர பகுதியான முதலியார்பேட்டை, உருளையான் பேட்டை, புதுவை புறநகர பகுதியான நெட்டப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பல்சர் வாகனங்களை மட்டும் குறிவைத்து திருடி வந்தது தெரியவந்தது.
மேலும் படிக்க: `மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே வேந்தர்!’ - ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய மேற்கு வங்க அமைச்சரவை!
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் பக்கத்தில் உள்ள சங்கர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.5 லட்ச ரூபாய் மதிப்பிளான 4 பல்சர் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டிற்கும், பைக் திருடும் பணத்தை மதுகுடிக்கவும் ஆடம்பர செலவிற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். இருவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்