மேலும் அறிய

Crime: நாகர்கோவிலில் பாழடைந்த கிணற்றில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

தினமும் இரவு நேரத்தில் இந்த கிணற்றின் அருகே ஒரு ஆசாமி மது அருந்தி வந்ததாகவும், அந்த ஆசாமி கடந்த சில நாட்களாக இங்கு வரவில்லை என்றும் தெரிய வந்தது.

நாகர்கோவிலில் பாழடைந்த கிணற்றில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூடாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டி.வி.டி.காலனி செந்தூரான் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவர் தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு உள்ளது. அந்த கிணறு தற்போது பயன்பாடு இல்லாமல் குப்பைகள் நிறைந்து, பாழடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் கழிவுநீரும் தேங்கி உள்ளது. இந்த நிலையில், நேற்று கிணற்றில் ஒரு மனித எலும்புக்கூடு கிடந்ததை, அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே. இதுபற்றி கோட்டார் போலீசாருக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றை பார்வையிட்டனர்.
 
அதே சமயம் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர். அவர்கள் கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கினார்கள். அப்போது கிணற்றின் ஒரு ஓரத்தில் கிடந்த மனித எலும்புக்கூட்டை ஒரு சாக்கில் கட்டி கிணற்றின் மேலே வீரர்கள் கொண்டு வந்தார்கள். பின்னர் எலும்புக்கூடு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தினமும் இரவு நேரத்தில் இந்த கிணற்றின் அருகே ஒரு ஆசாமி மது அருந்தி வந்ததாகவும், அந்த ஆசாமி கடந்த சில நாட்களாக இங்கு வரவில்லை என்றும் தெரிய வந்தது. இதனால் சம்பவத்தன்று அந்த ஆசாமி கிணற்றின் அருகே மது அருந்தும் போது, தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு யாரும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?
இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?
Embed widget