பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரசுப்பள்ளி ஆசிரியர் - மயிலாடுதுறையில் கொடூரம்
மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, காவல்துறை சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கண்ணாரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் என்பவரது மகன் ஐயப்பன். இவருக்கு வயது 35. அறிவியல் பட்டதாரி ஆசிரியரான இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி ஒன்றில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகாத இவர், மயிலாடுதுறையில் தங்கி பள்ளி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார்.
பன்னிரெண்டு வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மயிலாடுதுறையில் கைது.
இந்நிலையில் அவர் பணிபுரியும் அதே பள்ளியில் 12 -ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியும் ஒருவரும் அவரது டியூஷன் சென்டரில் படித்தித்து வந்துள்ளார். கடந்த மாதம் அந்த மாணவியை தான் டியூஷன் சென்றுக்கு அழைத்துச் சென்று, அங்கு சென்றதும் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் தொடர்ந்து இதே போல பல முறை அந்த மாணவியை அங்கு அழைத்து சென்று தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அந்த மாணவிக்கு சற்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குளத்தில் இருந்த மீட்கப்பட்ட மீன் வியாபாரியின் உடல்! 3 பேர் அதிரடியாக கைது! காரணம் என்ன?
அரசு பள்ளி ஆசிரியர் கைது:
இதில் சந்தேகப்பட்ட பெற்றோர், மாணவியிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த மாணவி தன்னிடம் ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை அழைத்துச்சென்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் நாகவல்லி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் பள்ளி ஆசிரியர் ஐயப்பனை கைது செய்து நாகப்பட்டினத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் அவரை நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.
Goa Murder: "நான் என் குழந்தையை கொல்லவில்லை" விசாரணையில் அந்தர் பல்டி! சிஇஓ பரபர வாக்குமூலம்!
அரசு பள்ளி ஆசிரியர் பள்ளியில் பயிலும் மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த ஆசிரியர் வேறு மாணவிகளிடம் இதுபோன்று நடந்துக் கொண்டாரா எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"நாங்க ஏரியாவில் பெரிய ரவுடிங்கடா, எங்ககிட்ட கஞ்சா வாங்கிட்டு போங்கடா” - மிரட்டிய இளைஞர்கள் கைது