Former SBI Chief | கடன் மோசடி வழக்கில் எஸ்பிஐ முன்னாள் தலைவர் பிரதீப் சௌத்ரி கைது..
"சொத்தை குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக அளித்த புகார் அளிக்கப்பட்டது" முன்னாள் தலைவர் பிரதீப் தலைவர், அவருடைய டெல்லி இல்லத்தில் கைது செய்யப்பட்டார்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் பிரதீப் தலைவர், அவருடைய டெல்லி இல்லத்தில் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் காவல்துறை இவரை கைது செய்திருக்கிறது. 2011-ம் ஆண்டு எஸ்பிஐ தலைவராக பொறுப்பேற்ற இவர் 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது ராஜஸ்தான் காவல்துறை கைது செய்திருக்கிறது.
பிரச்னை என்ன?
20008-ம் ஆண்டு காட்வான் குழுமம் ஓட்டல் கட்டுவதற்காக ரூ.24 கோடியை எஸ்பிஐ வங்கி கடனாக பெற்றிருக்கிறது. ஓட்டல் கட்டும் சமயத்தில் 2010-ம் ஆண்டு நிறுவனர் மறைந்துவிடுகிறார். அதனால் 2010-ம் ஆண்டு முதல் இந்த கணக்கு வாராக்கடன் கணக்காக மாறிவிடுகிறது. கடனை வசூலிப்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததால் asset reconstruction நிறுவனத்துக்கு (ஏஆர்சி) விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சொத்து 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
பிரதீப் சௌத்திரி எஸ்பிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அல்கெமிஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்தார். இந்த நிலையில் கடன் வாங்கிய நிறுவனம் சார்பில் குறைந்த விலைக்கு இந்த சொத்து விற்கப்பட்டிருக்கிறது என வழக்கு தொடுத்திருக்கிறது. அந்த சொத்தை 2017-ம் ஆண்டு மதிப்பீடு செய்த போது அதன் மதிப்பு ரூ.170 கோடியாகவும் அதன் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடி என்றும் புகார் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் சொத்தை குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக அளித்த புகார் அளிக்கப்பட்டது. அதனால் இந்த சொத்து வாங்கப்பட்ட சமயத்தில் அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்தில் உள்ள அனைத்து இயக்குநர்களும் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. தற்போது டெல்லியில் உள்ள இல்லத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் ஆறு நபர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
வங்கியாளர்கள் எதிர்ப்பு
காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு வங்கியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சொத்து பரிமாற்றத்துக்கும் விதிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையிலே அந்த பரிமாற்றங்கள் நடக்கின்றன. தற்போதை கைது உள்நோக்கம் கொண்டது என எஸ்பிஐ முன்னாள் தலைவர ரஜ்னீஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.
இது போன்ற கைது நடவடிக்கைகள் இருந்தால் வங்கியாளர்கள் எப்படி சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் பல ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முறையான நோட்டீஸ் மற்றும் சம்பன் இல்லாமல் ஒரு மாநிலத்தில் உள்ள காவல் துறை மற்ற மாநிலத்தில் உள்ளவரை எப்படி கைது செய்ய முடியும் என வங்கியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எஸ்பிஐ விளக்கம்
சொத்துகள் பரிமாற்றம் செய்யும்போது தேவையான அனைத்தும் பின்பற்றப்பட்டிருக்கின்றன. சட்டம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்க்கும் போதுமான ஒத்துழைப்பை எஸ்பிஐ வழங்கி இருக்கிறது. மேலும் தேவைப்பட்டாலும் வழங்குவோம். அளிக்கப்பட்ட புகாரில் உள்ள தகவல்களில் பிழை உள்ளதாக அறிகிறோம். இந்த வழக்கில் எஸ்பிஐ ஒரு பங்குதாரர் இல்லை என்பதால் இதற்கு மேல் கருத்து சொல்ல ஏதுமில்லை என்றும் எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது