மேலும் அறிய
Advertisement
Crime: பேஸ்புக்கில் இருந்து எடுக்கப்பட்ட 85 பெண்களின் புகைப்படங்கள்.. மார்பிங் செய்து மிரட்டிய கொடூரம்..
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 42 வயதான டிரக் டிரைவர் ஒருவர் 85 பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆன்லைனில் பரப்புவதாக மிரட்டியதை அடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 42 வயதான டிரக் டிரைவர் ஒருவர் 85 பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆன்லைனில் பரப்புவதாக மிரட்டியதை அடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 42 வயதான கணேஷ் சிங் என்ற நபர் டிரக் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் இவர் பல்வேறு சமூக ஊடக கணக்குகளில் இருந்து பெண்களின் புகைப்படங்களை எடுத்து, இணையத்தில் கிடைக்கும் ஆபாச படங்களுடன் அவற்றை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவரது போனில் 485 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததைக் கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணையின் போது, கணேஷ் வேடிக்கைக்காக" இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மே 6ம் தேதி ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது வாட்ஸ்அப்பில் அவரது முகம் நிர்வாண உடலுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, கணேஷ் தன்னுடன் பேசுமாறு கூறியதாகவும், அவ்வாறு செய்யத் தவறினால், அந்தப் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் அளித்தார். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், கணேஷ் தனது போனை சுவிட்ச் ஆப் செய்து இருந்தது தெரியவந்தது. காவல்துறையின் கூற்றுப்படி, "அவர் அவர்களின் படங்களை எடிட் செய்து மார்பிங் செய்து ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த பெண்களை ஃபேஸ்புக் மெசஞ்சரில் தொடர்பு கொண்டு அவர்களின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்புவார்கள் . தொடர்ந்து மிரட்டி அவர்களின் நிர்வாணப் படங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு செய்ய மறுத்தால் மார்பிங் செய்யப்பட்ட படங்களைப் பரப்பிவிடுவேன் என்று மிரட்டினார். பல பெண்கள் பயந்து அவனது கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளனர்.”
மேலும் சிலர் தாங்கள் பயந்து தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகவும், பல பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவரின் தொலைபேசியில் இருந்து, அவர் பெண்களை மிரட்டியதாகக் கூறப்படும் 485 ஆபாச வீடியோக்கள் மீட்கப்பட்டன. அவர் ராஜஸ்தானில் உள்ள ஒரு தாபாவில் சிம் கார்டைக் கண்டுபிடித்ததாகவும், அதைப் பயன்படுத்தி பெண்களைத் தொடர்பு கொண்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்த முறையைப் பயன்படுத்தி அவர் குறைந்தது 85 பெண்களை மிரட்டியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
பொது அறிவு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion