மனைவி மற்றும் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட திட்டம் : நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி கைது!
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் மனைவி மற்றும் மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்து அமைந்துள்ளது துரைப்பாக்கம். துரைப்பாக்கம் பகுதியில் உள்ளது கண்ணகி நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி. 32 வயதான இவர் ரவுடி ஆவார். இவர் மீது துரைப்பாக்கம், கண்ணகி நகர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குள் நிலுவையில் உள்ளது.
கேளம்பாக்கத்தை அடுத்து அமைந்துள்ள மாம்பக்கத்தில் வசிப்பவர் சேகர் என்ற நாய்சேகர். அவருக்கும், பிரபல ரவுடி கிச்சாவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்த, கிச்சா தனது மனைவி மற்றும் நாய்சேகரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, பெருங்குடியில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் கிச்சா ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவருடன் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகளான ஜெகன் ( வயது 22), பார்த்திபன் (21) ராஜராஜன் (26 ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்த ஒரு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள், 5 வீச்சரிவாள்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தன்னைப் பற்றி போலீசாருக்கு துப்பு கொடுத்த சந்தியா என்ற பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஏற்கனவே கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் தேடி வந்தனர். தற்போது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Headlines Today, 16 Dec: தமிழ்நாட்டில் ஒமிக்ரான்... வாய் திறந்த கோலி.. தங்கமணி வீட்டில் ரெய்டு... இன்னும் பல!
மேலும் படிக்க : ஜோஸ் ஆலுக்காஸில் 35 கிலோ தங்கம் கொள்ளை: சிசிடிவி இல்லாதது விசாரணைக்கு சற்று பின்னடைவு என எஸ்.பி பேட்டி
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்