மேலும் அறிய
Advertisement
‛டாக்டர் வழங்கும் எந்த சான்றிதழையும் நம்ப முடியாமல் போகலாம்...’ மதுரை ஐகோர்ட் வேதனை!
பொய் மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், எதிர்காலத்தில் மருத்துவர்கள் பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்...
மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்குவதை நிறுத்தாவிட்டால், மருத்துவர்கள் அளிக்கும் எந்த சான்றிதழையும் நம்ப முடியாத நிலை ஏற்படும்.- மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி.
தஞ்சாவூரைச் சேர்ந்த கோபிநாத்தை கஞ்சா வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் 3 வாரம் ஜாமீன் வழங்கியது. 3 வாரத்துக்கு பிறகு நீதிமன்றம் சரண் அடையவும் உத்தரவிட்டது. அதன்படி கோபிநாத் சரண் அடையவில்லை. இதனால் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவர் மீது குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இரு வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் கோபிநாத் மனு தாக்கல் செய்தார். அதில், "விபத்தில் சிக்கியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 2 மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் நீதிமன்றத்தில் சரண் அடைய முடியவில்லை என்று கூறியிருந்தார். தஞ்சாவூர் மருத்துவர் சி.பாலாஜி வழங்கிய மருத்துவ சான்றிதழையும் அவர் தாக்கல் செய்தார்.
அந்த மருத்துவ சான்றிதழ் மீது சந்தேகம் அடைந்து, அந்த சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த மருத்துவ சான்றிதழ் பெய்யானது என தெரியவந்தது.
இந்நிலையில் கோபிநாத்தின் முன்ஜாமீன் மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தரப்பில், "மருத்துவர் பாலாஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது" என்றார்.
இதையடுத்து நீதிபதி,
"மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்குவதை நிறுத்தாவிட்டால், மருத்துவர்கள் அளிக்கும் எந்த சான்றிதழையும் நம்ப முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கும் வழக்கத்தை அடியோடு ஒழிப்பது, பொய் மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், எதிர்காலத்தில் மருத்துவர்கள் பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது மருத்துவ கவுன்சில் கடமையாகும். இந்த வழக்கில் மனுதாரர் மீது 14 வழக்குகள் உள்ளன. 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது முன்நடத்தை, பொய் மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்தது போன்ற காரணங்களுக்காக அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என உத்தரவில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion