மேலும் அறிய

Watch Video : தொடரும் சுங்கச்சாவடி அத்துமீறல்: தன்னார்வலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்... அதிர்ச்சி வீடியோ!

சுங்கச்சாவடியில் நடக்கும் தாக்குதல்கள், குண்டர்கள் மற்றும் ரவுடிகளால் நிகழ்த்தப்படும் தாக்குதலைப் போன்ற ஒவ்வொரு முறையும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடி என்கிற பெயரில் ரவுடியிசம் நடப்பது, அவ்வப்போது நடைபெறும் கசப்பான சம்பவங்கள் மூலம் அறிய முடிகிறது. அந்த வகையில், கருணை உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்க அவர்களது வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அவர்களது மீட்பு வாகனத்திற்கு சுங்கம் செலுத்த கூறியுள்ளனர். தங்களின் சமூகப்பணி குறித்து கூறி, தங்களது வாகனத்திற்கு வழிவிடுமாறு அவர்கள் கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், அமைப்பினர் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. 
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட வாகனத்தில் சென்ற அறக்கட்டளையை சேர்ந்த யுவஸ்ரீ என்பவர் தனது முகநூலில் அந்த சம்பவம் குறித்து வீடியோ உடன் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

Watch Video : தொடரும் சுங்கச்சாவடி அத்துமீறல்: தன்னார்வலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்... அதிர்ச்சி வீடியோ!
 
‛‛மாற்றத்தை நோக்கிய பாதையில் ஆதிக்கத்தை எதிர்த்துபோராட வேண்டிய சூழல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியாக நேற்றைய தினம்(20/2/22) ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்ப்பதற்காக கருணை உள்ளங்கள் அறக்கட்டளை சேர்ந்த யுவஸ்ரீ(நான்), சிவதர்ஷினி என்று இரண்டு பெண் தன்னார்வளர்களும் அப்பாஸ், சுரேந்தர், மருது என்ற ஆண் தன்னார்வளர்களும் சென்று சேர்த்துவிட்டு திரும்புகையில் மணி நள்ளிரவு பண்ணிரெண்டு ஆகியிருந்தது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு வருகையில் சரியாக நள்ளிரவு 12.10 மணி இருக்கும். நாங்கள் இதுவரை எண்ணூறுக்கும் மேற்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்தும் ஆதரவற்று சாலையோரம் இருக்கும் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரையும் மீட்டு காப்பகங்களில் சேர்த்தும் சமுக பணியாற்றி வருகிறோம். இந்த சூழலில் நேற்று நாங்கள் திரும்பி வருகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அங்கு பணிபுரிபவர்கள் வழி மறைக்க எங்களது வாகனம் Emergency rescue van எங்களது சமூக பணி குறித்தும் நாங்கள் எங்களது தனிப்பட்ட வேலைக்காகவும் செல்லவில்லை ஆதரவற்ற ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சேர்ப்பதற்காகவே சென்றோம் என கூறியும் அவர்கள் பணம் கொடுத்துவிட்டுதான் செல்லவேண்டும் என கூறினார்கள். சரி உங்களது மேலதிகாரியிடம் பேசிக்கொள்கிறோம் என வண்டியை திருப்பி அலுவலகத்தை நோக்கி வருகையில் அந்த சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஒருவர் எங்களது வாகனத்தின் கண்ணாடியினை கைகளால் ஓங்கி தட்டி உடைக்க முயன்றார். உடனே நாங்கள் வண்டியிலிருந்து இறங்கி பேசுவதற்காகதானே வந்தோம் என கூறுவதற்குள் எங்களோடு வந்த மூன்று தன்னார்வளர்களையும் ஒரு பதினைந்திற்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து அடித்து அலுவலகத்திற்குள் அழைத்து சென்றுவிட்டார்கள் நாங்கள் இரு பெண் தன்னார்வளர்களும் இந்த நிகழ்வின்போதெல்லாம் அங்குதான் இருக்கிறோம் அப்பொழுது நாங்கள் எடுத்த வீடியோவை இங்கு பகிர்கிறோம். சமூக ஆர்வலருக்கு இங்கு இப்படியான மரியாதைதான் கொடுக்கப்படுகிறது. இதை எல்லோரும் எல்லோருக்கும் பகிருங்கள். ஆதிக்க வர்க்கமோ அநீதியோ இது இரண்டிற்கும் எதிரான போராட்டம் எப்போதும் தொடரும் அதில் மாற்றமில்லை. அதன் பிறகு அருகிலிருந்த போக்குவரத்து காவலர்களை வரவழைத்தோம் அவர்கள் வந்து பேசியபிறகு எங்கள் தன்னார்வளர்களை அடித்த சுங்கச்சாவடியில் பணிபுரிபவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டார்கள் பிறகு அங்கிருந்து நாங்கள் கிளம்பிவிட்டோம்.அதன்பிறகு எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி ஒரு சமூக சேவை செய்பவருக்கு இங்கு கொடுக்கப்படும் மரியாதை இதுதானா? இந்த சமுகம் சேவை செய்பவரை தெய்வமாக பார்க்க வேண்டாம் ஆனால் சாதாரண மனிதனாகவாவது மதிக்கலாம் அல்லவா....இப்படி ஒரு அமைப்பு வைத்து சமுக பணி செய்பவர்களுக்கே ஆதிக்கவர்கத்தினால் இந்த நிலை என்றால் ஒரு சாமானிய மனிதனோட நிலை என்ன என்ற கேள்விக்கான பதிலும் தேட வேண்டியிருக்கிறது. இதற்காகவெல்லாம் எங்கள் பணி தடைபடபோவதில்லை இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட ஒரு ஆதரவற்ற முதியவரை மீட்கதான் சென்றுகொண்டிருக்கிறேன். ஆதிக்க வர்க்கத்திற்கும் கொஞ்சமும் மனிதமற்றவர்களுக்கும் எதிரா எற் எதிர்ப்பினை எழுத்தின் மூலம் பதிவு செய்துவிட்டேன். நீங்கள் இதை பகிர்வதற்மூலம் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். இது நிச்சயம் முதல்வர் முதல்வர் கவனத்திற்கு மற்றும் உயரதிகாரிகள் கவனத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது அனைவரும் பகிரவும்,’’ என்று அந்த பதிவில் அவர் பதிவிட்டுள்ளார்.
சுங்க ஊழியர்கள் தாக்கும் வீடியோ இதோ...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Embed widget