மேலும் அறிய

Crime : ஐந்து குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்ற தாய்...16 ஆண்டுகளுக்கு பின் கருணைக்கொலை.. என்ன நடந்தது?

பெல்ஜியத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் கருணைக் கொலை செய்யப்பட்டார்.

Crime : பெல்ஜியத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் கருணைக் கொலை செய்யப்பட்டார்.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் ஜெனிவில் லெர்மிட் (58). இவர் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்தார். நிவெல்லஸ் நகரில் அவரது வளர்ப்பு தந்தையுடனும், அவரது 5 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.  ஜெனிவில் லெர்மிட்டின் குடும்ப நண்பர் மைக்கேல். இவர் வளர்ப்பு தந்தையாகவே ஜெனிவில் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் ஜெனிவிலுக்கு, தனது குடும்ப வாழ்க்கையில் மைக்கேல் தலையிடுவது பிடிக்கவில்லை. இதனை தெரிந்தும் மைக்கேல் வீட்டைவிட்டு செல்லாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ஜெனிவில் 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி தனது ஐந்து குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். அவரது 3 முதல் 14 வயது வரையில் உள்ள ஒரு மகனையும், 4 மகள்களையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஜெனிவிலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு 2008ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு மனநலம் பாதித்தது. இதனால் இவர் 2019ஆம் ஆண்டு மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையில் தன்னை கருணைக் கொலை செய்ய வேண்டும் என ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை வைத்தார். பெல்ஜியம் நாட்டில் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால், கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்தெடுக்க அந்த நாட்டின் சட்டம் அனுமதிக்கிறது.  

இந்நிலையில், அவர் கருணைக் கொலை செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் நிக்கோலஸ் கோஷன் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் நிக்கோலஸ் கோஷன் கூறியதாவது, "ஜெனிவில் லெர்மிட் செய்த கொலைகளில் 16வது நினைவு நாளில் (பிப்ரவரி 28) அவர் கருணைக் கொலை செய்யப்பட்டார். பல்வேறு மருத்துவ பரிசோதனைக்கு பின்னரை அவர் கருணைக் கொலை செய்யப்பட்டதாக" தெரிவித்தார்.

பெல்ஜியத்தில் கடந்த ஆண்டு 2,966 பேர் கருணைக் கொலை செய்யப்பட்டனர். 2021ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Crime : தேர்வு எழுத அனுமதி மறுப்பு : 9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன?

Crime : அட கொடுமையே...! மேக்கப்பால் வீங்கிய மணப்பெண் முகம்....திருமணத்தை நிறுத்திய மணமகன்.. பெரும் பரபரப்பு...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பூப்பெய்திய மாணவியை வெளியே அமரவைத்த பள்ளி- சர்ச்சையானதை அடுத்து முதல்வர் சஸ்பெண்ட்!
பூப்பெய்திய மாணவியை வெளியே அமரவைத்த பள்ளி- சர்ச்சையானதை அடுத்து முதல்வர் சஸ்பெண்ட்!
பூப்பெய்திய மாணவிக்கு பள்ளியில் நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை.. நடவடிக்கை பாயுமா.?
பூப்பெய்திய மாணவிக்கு பள்ளியில் நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை.. நடவடிக்கை பாயுமா.?
Trump's Twist: பதில் வரியா போடுறீங்க.?! ட்ரம்ப்பிடம் சிக்கிய சீனா.. நூலிழையில் தப்பிய மற்ற நாடுகள்...
பதில் வரியா போடுறீங்க.?! ட்ரம்ப்பிடம் சிக்கிய சீனா.. நூலிழையில் தப்பிய மற்ற நாடுகள்...
Dr Ramadoss; ‘தம்பி, தலைவர் பதவியே அப்பாவே எடுத்துக்கிறேன்’ அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!
Dr Ramadoss; ‘தம்பி, தலைவர் பதவியே அப்பாவே எடுத்துக்கிறேன்’ அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER NAINAR NAGENDRAN: டெல்லி பறந்த நயினார்!பாஜக தலைவர் UPDATE அமித்ஷா அறிவிப்பு? | BJPNTK BJP Alliance : சீமானுடன் முடிந்த டீல்.. பாஜகவில் மெகா கூட்டணி! அண்ணாமலை ஸ்கெட்ச் 2026Seeman meets Nirmala Sitharaman:  நிர்மலாவை சந்தித்தாரா சீமான்? பாஜக போடும் ஸ்கெட்ச்! நடந்தது என்ன?Sengottaiyan vs EPS:  செங்கோட்டையன் தனி ரூட்! நிர்மலா பக்கா ஸ்கெட்ச்! மரண பீதியில் எடப்பாடி? | ADMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூப்பெய்திய மாணவியை வெளியே அமரவைத்த பள்ளி- சர்ச்சையானதை அடுத்து முதல்வர் சஸ்பெண்ட்!
பூப்பெய்திய மாணவியை வெளியே அமரவைத்த பள்ளி- சர்ச்சையானதை அடுத்து முதல்வர் சஸ்பெண்ட்!
பூப்பெய்திய மாணவிக்கு பள்ளியில் நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை.. நடவடிக்கை பாயுமா.?
பூப்பெய்திய மாணவிக்கு பள்ளியில் நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை.. நடவடிக்கை பாயுமா.?
Trump's Twist: பதில் வரியா போடுறீங்க.?! ட்ரம்ப்பிடம் சிக்கிய சீனா.. நூலிழையில் தப்பிய மற்ற நாடுகள்...
பதில் வரியா போடுறீங்க.?! ட்ரம்ப்பிடம் சிக்கிய சீனா.. நூலிழையில் தப்பிய மற்ற நாடுகள்...
Dr Ramadoss; ‘தம்பி, தலைவர் பதவியே அப்பாவே எடுத்துக்கிறேன்’ அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!
Dr Ramadoss; ‘தம்பி, தலைவர் பதவியே அப்பாவே எடுத்துக்கிறேன்’ அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!
Happy Siblings Day 2025: உடன்பிறப்புகள் தின வாழ்த்துக்கள், படங்கள் இங்கே! முக்கியத்துவம் என்ன?
Happy Siblings Day 2025: உடன்பிறப்புகள் தின வாழ்த்துக்கள், படங்கள் இங்கே! முக்கியத்துவம் என்ன?
Gold Rate 10th April: தாறுமாறாக எகிறும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,200 உயர்வு.. இன்றைய விலை தெரியுமா.?
தாறுமாறாக எகிறும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,200 உயர்வு.. இன்றைய விலை தெரியுமா.?
Dr.Ramadoss :
Dr.Ramadoss : "நானே இனி தலைவர், அன்புமணி இல்லை’ அதிரடியாக அறிவித்தார் ராமதாஸ்..!
படுக்கை அறைக்குள் இருந்த இளைஞர்! வசமாக சிக்கிய மத்திய அமைச்சரின் பேத்தி! கணவர் செய்த வெறிச்செயல்!
படுக்கை அறைக்குள் இருந்த இளைஞர்! வசமாக சிக்கிய மத்திய அமைச்சரின் பேத்தி! கணவர் செய்த வெறிச்செயல்!
Embed widget