Crime: அக்கா மீது ஆத்திரம்.. தம்பியே செய்த சதி.. பழனி அருகே மதுவில் விஷம் வைத்து கொலை - இருவர் கைது
சுரேஷ் உடனான தொடர்பை துண்டிக்குமாறு மகேஸ்வரியின் தம்பியான பெருமாள் புதூரைச் சேர்ந்த கருப்புச்சாமி கண்டித்து வந்துள்ளார்.
பழனியை அடுத்த பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (39). கடந்த 3-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து கீரனூர் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் போலீஸார் விசாரணையில் மரணமடைந்த சுரேஷ், பூலம்பட்டியை சார்ந்த கணவனை இழந்த உறவினர் பெண் மகேஸ்வரி (44) என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
CM Stalin: "என் வழி.. தனி வழி.." ஆக்கப்பூர்வ அரசியல்தான் எங்கள் பாணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதனையடுத்து சுரேஷ் உடனான தொடர்பை துண்டிக்குமாறு மகேஸ்வரியின் தம்பியான பெருமாள் புதூரைச் சேர்ந்த கருப்புச்சாமி (36) என்பவர் கண்டித்து வந்துள்ளார். இதனை சுரேஷும், மகேஸ்வரியும் கேட்காமல் தொடர்பு வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி சுரேஷ் தனது நண்பர் பூலாம்பட்டியைச் சேர்ந்த சவரத் தொழிலாளியான மணிமாறன் (25) என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார். மது அருந்திய பின் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் சுரேஷை, பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சுரேஷின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மதுவில் விஷம் கலந்து குடித்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷுடன் வாழ்ந்து வந்த மகேஸ்வரி, சுரேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கீரனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ் உடன் தொடர்பை கைவிட மறுத்த மகேஸ்வரியின் மீது ஆத்திரம் கொண்ட, அவரது சகோதரர் கருப்புசாமி சுரேஷை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது .
ஏடிஎம் கொள்ளை சம்பவம்: 3 துணை ஆய்வாளர் உள்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Valentines Day 2023: "காலமெல்லாம் காதல் வாழ்க”: தமிழில் பார்க்கக்கூடிய டாப் 10 காதல் படங்கள் இதோ..!
இதன்படி சுரேஷின் நண்பரான மணிமாறனை வைத்து கருப்புசாமி மது பாட்டிலில் விஷம் கலந்து சுரேஷுக்கு கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மகேஸ்வரியின் சகோதரர் கருப்புசாமி மற்றும் நண்பர் மணிமாறன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்