மேலும் அறிய

ஏடிஎம் கொள்ளை சம்பவம்: 3 துணை ஆய்வாளர் உள்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் எதிரொலியாக 3 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மற்றொரு தகவல் வந்தது. இதேபோல், திருவண்ணாமலை நகர எல்லைக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனிமலை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.32,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. தொடர்ந்து 2 ஏ.டி.எம். மையங்களிலும் போலீசார் பார்வையிட்டு சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் மீது கொள்ளையர்கள் கருப்பு நிற 'ஸ்பிரே'வை அடித்து விட்டு உள்ளே சென்று உள்ளனர். மேலும், திருவண்ணாமலை நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கத்தில் உள்ள ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ‌ 3,00,000 திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் போளூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 கொள்ளையடிக்கப்பட்டது.

 


ஏடிஎம் கொள்ளை சம்பவம்: 3 துணை ஆய்வாளர் உள்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

நள்ளிரவு 12 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து மொத்தம் 72 லட்ச 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை கட்செய்த போது பணத்தில் தீ படாதவாறு புத்திசாலி தனமாக இயந்திரத்தை மட்டும் கட்செய்துள்ளனர். பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எரித்ததுடன், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் கொள்ளையர்கள் எரிந்ததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது. 

 


ஏடிஎம் கொள்ளை சம்பவம்: 3 துணை ஆய்வாளர் உள்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

 

இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் திருவண்ணாமலையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற கடந்த 11-ந் தேதி இரவு திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட துணை ஆய்வாளர் மோகன், பலராமன் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் வரதராஜ், சுதாகர் உள்பட 6 நபர்களை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படைக்கு மாற்றி இன்று உத்தரவிட்டார். ரோந்து பணியில் ஈடுபட்ட 6 காவல்துறையினரை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget