மேலும் அறிய

Crime: டெல்லியை நடுங்க வைத்த சம்பவம்... பெண் வழக்கறிஞர் கொடூர கொலை... பதுங்கிய கணவர்.. என்ன நடந்தது?

டெல்லியில் பெண் வழக்கறிஞரை அவரது கணவரே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: தலைநகர் டெல்லியில் பெண் வழக்கறிஞரை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை நடுங்க வைக்கும் கொலைகள்:

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் கதிகலங்க வைக்கிறது. சமீபத்தில் கூட நடுரோட்டில் 16 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் 21 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பெண் வழக்கறிஞர் கொலை:

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் ரேனு ஷின்கா (61). இவர் தனது கணவருடன் டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவரான அஜய் நாத்  இந்திய வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நிலையில், இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனைவி என்று கூட பார்க்காமல் அஜய் நாத், மனைவி ரேனு சின்காவை கொலை செய்துள்ளார். கொலை செய்து மனைவி ரேனு சின்காவின் உடலை பாத்ரூமிலேயே மறைத்து வைத்திருக்கிறார். 

அப்போது, சம்பவத்தன்று மாலை ரேனு சின்காவின் சகோதரர் அவருக்கு வழக்கம் போல் போன் செய்துள்ளார். ஆனால் ரேனு சின்கா அவரது அழைப்பை எடுக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த ரேனு சின்காவின் சகோதரர் சம்பவத்தன்று மாலை 3.15 மணிக்கு வீட்டிற்கு வந்து கதவை தட்டியிருக்கிறார். ஆனால் யாரும் கதவை திறக்காதால் சந்தேகமடைந்த ரேனு சின்காவின் சகோதரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

என்ன காரணம்?

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரேனு சின்கா பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு ரத்து வெள்ளத்தில் கிடந்துள்ளார்.  ரேனுகாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வீட்டில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தியபோது அவரது கணவரை காணவில்லை. பின்னர், போலீசார் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது  ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. தொடர்ந்து வீடு முழுவதும் போலீசார் சோதனை செய்தபோது, வீட்டின் ஸ்டோர் ரூமில் மறைந்து இருந்துள்ளார். இதனை அடுத்து, அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.  மேலும், இவர்கள் வசித்து வந்த வீட்டை ரூ.4.5 கோடிக்கு விற்க முடிவு செய்தார் கணவர் அஜய் நாத்.

இதற்காக ரூ.55 லட்ச அட்வான்சும் வாங்கி உள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ரேனு சின்கா விற்கக் கூடாது என்று பலமுறை கூறியிருக்கிறார். இதனால் இவர்கள்  இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மனைவி வீட்டை விற்க சம்மதம் தெரிவிக்காத ஆத்திரத்தில் கணவர் அஜய் நாத் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget