Crime : நிர்வாண பூஜை.. இளம்பெண்ணுக்கு சித்ரவதை.. மாமியார் செய்த கொடூரம்.. தொடரும் பகீர் சம்பவங்கள்..
Crime: கேரளாவில் நிர்வாண பூஜையில் பங்கேற்க மருமகளை வற்புறுத்திய மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Blackmagic Practices Crime : கேரளாவில் நிர்வாண பூஜையில் பங்கேற்க மருமகளை வற்புறுத்திய மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Crime: கேரளாவில் நிர்வாண பூஜையில் பங்கேற்க மருமகளை வற்புறுத்திய மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்கோட்டில் இளம்பெண்ணை அவரது மாமியார் மற்றும் குடும்பத்தினர் நிர்வாண பூஜையில் பங்கேற்க கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் பாலக்கோடு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, ”கடந்த 2016-ஆம் ஆண்டு தனக்கும் திருமணம் நடந்ததாகவும் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி, அந்த பெண்ணை, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால், நாகூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது தன்னை மட்டும் கணவர் மற்றும் மாமியார் ஒரு அறைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அந்த அறையில் மந்திரவாதி ஒருவர் தலைமையில் பூஜை ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு பெண்ணும் நிர்வாணமாக அமர்ந்திருந்தாக கூறப்படுகிறது. அதைபோன்று தன்னையும் அமர சொல்லி தனது கணவர் மற்றும் மாமியார் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார். அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் அந்த இடத்தை விட்டு சென்றதாக அந்த பெண் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் நிர்வாண பூஜைக்கு பங்கேற்க மறுத்ததால் கார் ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்தாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த பெண் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தார் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கணவர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு பெண்களை, ஒரு தம்பதி நரபலி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் தருமபுரியைச் சேர்ந்த பெண் உள்பட இருவரை கொன்றதாக கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் ஒரு தம்பதி உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.