Crime: திருமணமான 3 மாதங்களில் காதல் மனைவியை குத்திக்கொன்ற இளைஞர் கைது..
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பிரசாத் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சென்னையில் காதல் மனைவியை திருமணமான மூன்றே மாதங்களில் சரமாரியாக வெட்டிய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டை ஏகப்பன் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (18). இவர் புளியந்தோப்பு சுந்தரபுரம் முதல் தெருவைச் சேர்ந்த பிரசாத் (எ) குரங்கு பிரசாத் (26) என்பவரைக் காதலித்து வந்தார்.
பிரசாத் மீது ஏற்கனவே நொளம்பூர், ஏழுகிணறு, ஐசிஎப், பேசன் பிரிட்ஜ், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழ்ச் செல்வி பிரசாத்தை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து இருவரும் வியாசர்பாடி எம்.எம்.கார்டன் இரண்டாவது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பிரசாத் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் (செப்.19) இரவு 11 மணிக்கு போதையில் வீட்டுக்கு வந்த பிரசாத் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தமிழ்ச்செல்வி பிரசாத்தை தகாத வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பிரசாத், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாகக் வெட்டியுள்ளார். இதில், தலை, இடுப்பு, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தமிழ்ச்செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னதாக அதே பகுதியில் பதுங்கியிருந்த பிரசாத்தை கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் முன்னதாக மதுரை, பாலமேடு அருகே மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபரைக் காவல் துறையினர் முன்னதாகக் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள ராஜக்காள்பட்டியைச் சோ்ந்தவா் சீலைக்காரி (34). இவா் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் (44) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். முருகன் மும்பையில் நிதித்தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில் முருகன் மதுபோதையில் சீலைக்காரியைத் தொடா்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளாா். இதனால் சீலைக்காரி தனது குழந்தைகளுடன் மும்பையில் இருந்து சொந்த ஊரான ராஜக்காள்பட்டிக்கு கடந்த மாதம் வந்து விட்டாா்.
இந்நிலையில் மும்பையில் இருந்து வந்த முருகன், தனது உறவினரான போஸ் என்பவருடன் ராஜக்காள்பட்டிக்குச் சென்று சீலைக்காரியின் வீட்டை அடித்து சேதப்படுத்தியுள்ளாா்.
இதைத் தட்டிக்கேட்ட சீலைக்காரி மற்றும் அவரது தாய் நல்லதங்காள் ஆகியோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.இச்சம்பவம் தொடா்பாக சீலைக்காரி அளித்த புகாரின்பேரில் பாலமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முருகனை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தப்பிச் சென்ற போஸ் என்பவரைத் தேடி வருகின்றனா்.