மேலும் அறிய

Crime: கூடுவாஞ்சேரியில் நடந்த கொலை சம்பவம்: 9 பேர் கைதாகி சிறையில் அடைப்பு

கூடுவாஞ்சேரியில் நடந்த கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தாதாவின் கூட்டாளிகள்
 
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர், பகவதிபுரம் துங்கபத்ரா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளராக இருந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. இதில் செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்தபோது கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் செய்து வந்தார். அப்போது இவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் பகுதியில் பிரபல தாதாவாக இருந்த ஸ்ரீதர் என்பவருடன் செந்திலுக்கு நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. ஸ்ரீதர் மறைந்த பிறகு செந்தில்குமார் காஞ்சிபுரத்திலிருந்து, இடம் பெயர்ந்து செங்கல்பட்டு பகுதியில் குடியேறியுள்ளார்.
 
Crime chennai guduvanchery  murder due to private finance company TNN தனியார் நிதி நிறுவனத்தால் நடந்த கொலை....சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!
 
செந்திலுக்கு ஸ்கெட்ச்..
 
மேலும் அப்பகுதியில் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலை தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் செந்தில்குமார் தனது இரண்டு குழந்தைகளையும் பைக்கில் அழைத்துக்கொண்டு, காலை நந்திவரம் புத்துக்கோயில் எதிரே உள்ள எஸ்ஆர்எம் பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு அருகிலுள்ள செல்வி நகரில் சென்று கொண்டிருந்தபோது அங்கே மறைந்து, இருந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் செந்தில்குமாருக்கு தலை, கழுத்து, முகம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரி வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.  அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதை கண்டதும் அந்த கும்பல் பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பியது. 
 
Crime: கூடுவாஞ்சேரியில் நடந்த கொலை  சம்பவம்: 9 பேர் கைதாகி சிறையில் அடைப்பு
 
சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செந்தில்குமாரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
Crime: கூடுவாஞ்சேரியில் நடந்த கொலை  சம்பவம்: 9 பேர் கைதாகி சிறையில் அடைப்பு
 
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் பிரபலமாக இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தின் மீது சமீபத்தில் புகார் எழுந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நினைத்துப் பார்க்காத அளவில் ஒரு லட்ச ரூபாய்க்கு பல ஆயிரம் ரூபாய் மாதம் வட்டி கிடைக்கும் என கூறி அந்த நிறுவனத்தில், காஞ்சிபுரம் பகுதியில் விஜயலஷ்மி என்பவர் முகவராக செயல்பட்டு வந்தார். இவர் அந்த பகுதியில் பொது மக்களிடம், கோடிக்கணக்கில் முதலீடு செய்து தலைமறைவாகியுள்ளார்.
Crime: கூடுவாஞ்சேரியில் நடந்த கொலை  சம்பவம்: 9 பேர் கைதாகி சிறையில் அடைப்பு
 
உறவினர் விஜயலட்சுமி..
 
விஜயலட்சுமி, உயிரிழந்த செந்திலின் உறவினர் ஆவார். செந்தில்குமார் விஜயலட்சுமி கூறிய ஆசை வார்த்தைகளில் நம்பி சுமார் 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை திருப்பி கேட்டு விஜயலட்சுமியை செந்தில்குமார் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். குறிப்பாக அந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெறுவதற்கு, சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி இருந்த அம்பத்தூர் பகுதிக்கு சென்று தனது பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது விஜயலட்சுமி செந்தில் குமாரை மிரட்டி உள்ளார் , உடனடியாக அவசர உதவி எண் 100க்கு கால் செய்து காவலர்களின் உதவியுடன் செந்தில்குமார் அங்கிருந்து திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில் தான் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதால், காவல்துறையினரின் சந்தேகம் விஜயலட்சுமி மீது திரும்பியது, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் விஜயலட்சுமியை கைது செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
 
மேலும் கைது..
 
இந்த வழக்கு சம்மந்தமாக கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த பிரவீன், பிரசாந்த், சப்ஜெயில்காந்த், கிரன்லால், ராகுல், சரத்(எ)சண்முகம், விக்கி(எ)விக்னேஷ்வரன், முகேஷ், ஆகாஷ் ஆகியோரிடமிருந்து 5 பைக்குகள், 3 கத்திகள், 2 ராடுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 9 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Crime: கூடுவாஞ்சேரியில் நடந்த கொலை  சம்பவம்: 9 பேர் கைதாகி சிறையில் அடைப்பு
 
இதில் பிரசாந்த் மேற்படி நிதி நிறுவனத்தில் ஏறத்தாழ ரூபாய் 30,00,000/ லட்சம் முதலீடு செய்துள்ளதும் அந்த பணம் சுமார் 76,00,000/லட்சமாக திரும்ப வரவேண்டி உள்ள நிலையில் அந்த பணத்தை திரும்ப தருவதற்கும், மேலும் ஊக்க தொகையாக பணம்தருவதற்கும் தான் தயாராக உள்ளதாகவும், அதற்கு செந்தில்குமாரை கொலை செய்தால் தான் வழிபிறக்கும் என்றும் எழிலரசன் பிரசாந்தை மூளைசலவை செய்து, கூலிபடையினரை அழைத்து வந்து பணம் தருவதாக கூறி இந்த கொலையை அரங்கேற்றி உள்ளது தெரியவந்தது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Watch Video:
Watch Video: "ராஜா ராஜாதான்" அஜர்பைஜான் நாட்டில் ஒலித்த இசைஞானி பாடல் - பாடியது யார் தெரியுமா?
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
Embed widget