(Source: Poll of Polls)
Crime : 'என்ன கல்யாணம் பண்ணிக்கோ..' : Livin ரிலேஷன்ஷிப் - துணையின் கழுத்தை நெரித்து கொலை.. என்ன நடந்தது?
சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை அவரது லின் இன் பார்ட்னர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை அவரது லின்-இன் பார்ட்னரை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷரத்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துர்கா த்ரித்லஹரே. இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் துர்க் மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கம்பெணியில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேத்மதி வர்மா என்பவருடன் பழக்கத்தில் இருந்துள்ளார். 46 வயதுடைய வேத்மதி வர்மா கணவரிடம் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது இரண்டு மகள்களும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். துர்கா பணியாற்றி வரும் அதே கம்பெணியில் பெண் வேத்மதி பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடையில் காதலாக மாறியது. துர்கா த்ரித்லஹரேவும், வேத்மதி வர்மா வீட்டிற்கு அடிக்கடி வந்துக் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக இருவரும் ஒரே வீட்டில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். அப்போது, பெண் வேத்மதி, உன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து தன்னுடன் நிரந்தரமாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த துர்கா அவரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று வேத்மதி வீட்டில் இருந்தார் துர்கா. அப்போது, பெண் வேத்மதி தன்னை திருமணம் செய்ய வேண்டும் என மீண்டும் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த துர்கா, லிவ் இன் பார்ட்னரான வேத்மதியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பெண்ணை கொலை செய்த துர்காவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து, துர்காவை போலீசார் சிறையில் அடைத்தனர். திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை, அவரது லின் இன் பார்ட்னர் கொலை செய்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.