Crime : 'அம்மாவுக்கு உடம்பு சரியில்லை...கூகுள் பேயில் பணம்...கையில் காசு தர்றேன்’ : ஏமாத்துறதுல டாக்டர் பட்டம் வாங்கிடுவாங்களோ..
Crime : அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Crime : அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வருபவர்கள் தனியார் விடுதிகளில் தங்கி இருப்பது வழக்கமானது. சென்னையில் பல தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை தரமணி அருகே திருவேங்கடம் நகரில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவர் நீண்டு நேரமாக விடுதியை கவனித்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து முதல் தளத்திற்கு சென்று அங்கு அறையில் தங்கி இருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தார்.
அப்போது அவர்களிடம் நான் கீழ் தளத்தில் புதிதாக வந்திருக்கிறேன் என்று முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்பு விடுதியை பற்றி சில தகவல்களை கேட்டுக் கொண்டார். அங்கு இருக்கும் இளைஞர்களிடம் பேசுகையில், எனது அப்பாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர்களிடம் கூறினார். எனது அப்பாவுக்கு சிகிச்சை அளிக்க என்னிடம் கையில் பணம் இல்லை. அதே வேளையில் எனது கூகுள் பே ஆப் சரியாக வேலை செய்யவில்லை.
நீங்கள் கூகுள் பேயில் பணம் அனுப்பினால் நான் ஏடிஎம்மில் பணத்தை எடுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அந்த இளைஞரின் பேச்சை கேட்டு விடுதியில் இருப்பவர்களுக்கு அவரின் வங்கி கணக்கிற்கு ரூ.5000 அனுப்பியுள்ளனர்.
விடுதியின் மேல் தளத்தில் உள்ளவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டதை அடுத்து, கீழ் தளத்தில் இருப்பவர்களையும் ஏமாற்ற நினைத்தார். அதன்படி, கீழ் தளத்தில் இருப்பவர்களிடம், நான் மேல் தளத்தில் புதிதாக தங்கி இருக்கிறேன். எனது அம்மாவுக்கு உடல்நலக்கு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போன்று அப்பாவி போல் பேசி அவர்களிடம் இருந்து ரூ.5,000 பெற்றுக் கொண்டார்.
பின்பு, அங்கிருந்த புறப்பட்ட சிறிது நேரத்தில் விடுதியில் வசிப்பவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறிகின்றனர். என்னிடம் கையில் பணம் இல்லை. முன்பு அனுப்பி அதே கூகுள் பே எண்ணிற்கு ரூ.40,000 அனுப்ப சொல்லி கேட்டிருக்கிறார். இவர் சொன்னதை நம்பி, பணத்தை அனுப்பி உள்ளனர்.
நீண்ட நேரமாகியும் அந்த நபர் விடுதிக்கு வராததால், அவர்கள் வார்டனிடம் விவரத்தை கேட்டுள்ளார். இதுபோன்ற யாரும் இன்று வரவில்லை என்று கூறினர். பின்பு, விடுதியின் சிசிடிவி கேமராவில் அந்த நபரை பார்த்து உறுதி செய்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்படி, போலீசார் அவரை கைது செய்தனர். மோசடியில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான சச்சின்குமார் என்பது தெரிந்தது.
இதைபோன்று பல விடுதிகளில் இளைஞர்களை ஏமாற்றி பண பறிக்கும் வேலையில் அவர் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிந்தது. இதனால் சச்சின்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.