Crime: செவிலியருக்கு 3 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை...சத்தீஸ்கரில் கொடூரம்...நடந்தது என்ன?
Crime: சத்தீஸ்கரில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Crime: சத்தீஸ்கரில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாவட்டத்தில் உள்ள சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் சயானி என்ற செயிலியர் பணியாற்றி வருகிறார். கொரியா மாவட்டத்தில் உள்ள பரடோல் கிராமத்தில் வசித்து வருகிறார். அந்த மையம் தீபாவளி பண்டிகை காரணமாக நேற்று முன்தினம் மதியம் மூடப்பட்டது என கூறப்படுகிறது. இந்த நிலையில் சயானி பணி முடிந்து மையத்தில் இருந்து வெளியே வந்ததும், அங்கு இருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த பெண்ணை ஒரு ரூமில் அடைத்தனர். பின்பு 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கயிற்றால் கட்டி, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் சயானியை வெளியே அனுப்பினர். இங்கு நடந்ததை பற்றி யாருக்கும் சொல்லக்கூடாது என எச்சரித்தனர். அந்த பெண் தனது வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் நடந்தவற்றை எல்லாம் தெரிவித்தனர். பின்பு, காவல்நிலையத்திற்கு சென்று சயானி மற்றும் அவரது பெற்றோர் புகார் ஒன்றை அளித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் இரண்டு பேரை ஜாக்ரகண்ட் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 3 பேர் கொண்ட கும்பல் முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 3 நபர்கள் யார் என்பது தெரியவில்லை. அந்த மையத்தில் வேலை செய்பவர்களா அல்லது வேறு யாராவது என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து அந்த மாநிலத்தின் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாதுகாக்க வேண்டிய பிரதிநிதிகளே பெண்களை துன்புறுத்தி வருவது நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் சிறுமிகள், இன்னொரு பக்கம் வயதினர் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் பாலியல் வன்கொடுமைகள் பெருகுவது சீரான சமூகத்துக்கு உகந்ததல்ல என்னும் அச்சம் அதிகரித்துக்கொண்டே வருகிறது
Sivaganga 144: சிவகங்கையில் நாளை முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு; ஏன் தெரியுமா?