Crime : அடுத்தடுத்த விபரீதங்கள்.. முன்னாள் காதலியின் லிவ்-இன் உறவால் ஆத்திரம்.. இளைஞர் செய்த கொடூரம்..
Crime : பெண்ணுடன் லிவ்-இன் உறவில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞரை அப்பெண்ணின் முன்னாள் காதலன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : பெண்ணுடன் லிவ்-இன் உறவில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞரை அப்பெண்ணின் முன்னாள் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா: உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள சன்ராக் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் ( 26). அதே பகுதியில் வசிக்கு பெண் ஒருவர் மனோஜ் குமாரை ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், லிவ்-இன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களாக இருவருக்கு சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சண்டையில் ஒருவரைக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் பேசி சண்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு, அந்த பெண் மனோஜ் குமாருடன், தனக்கு உன்னுடன் வாழ விருப்பமில்லை என்று கூறி அந்த நபரிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
மனோஜ் குமார், அந்த பெண்ணிடம் பலமுறை தன்னுடன் இருக்குமாறு கூறியுள்ளார். இதை அந்த பெண் மறுத்துவிட்டார். பின்பு இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழத் தொடங்கினர். இதனை அடுத்து, அந்த பெண் வேறோரு நபரை காதலித்து வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள ஜிரோலி கிராமத்தைச சேர்ந்தவர் மணீஷ் குமார் (19). இவரை காதலித்து, கடந்த 15 நாட்களாக இருவரும் லிவ்-இன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, அந்த பெண்ணின் முன்னாள் காதலனான மனோஜ் குமாருக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனை, அந்த பெண்ணின் நண்பர்களுடன், உண்மை என்ன என்பதை விசாரித்து உறுதி செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் மனோஜ் குமாருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.
பின்பு, சில நாட்களாக அவர்களை நோட்டமிடுவதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை ( நவம்பர் 12) அன்று அந்த பெண் மற்றும் மணீஷ் குமார் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மனோஜ் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு கோபமடைந்த மணீஷ், மனோஜை தாக்கியுள்ளார். பின்பு, ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் பேசி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
மணீஷுடன் சண்டை நீடித்த நிலையில், அவரை நெற்றியில் மனோஜ் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர், அவர் அந்த இடத்தைவிட்டு தப்பி சென்றுள்ளார். பின்பு, கடந்த ஞாயிற்றுகிழமை மனோஜ் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்பு அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நாட்டையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது,டெல்லியில் வசித்து வரும் அப்தாப் அமீன் பூனவல்லா எனும் நபர் தன்னுடன் லிவ்-இன் உறவில் இருந்த ஷ்ரத்தாவைக் கொலை செய்து அவரது உடலை 35 பாகங்களாக கூறுபோட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஸ்டோர் செய்து, காடுகளில் வீசி எறிந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் படிக்க