Crime: ஊர், ஊராக சென்று பாலியல் தொழில்.. போதையில் சிக்கிய தம்பதியினர்.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்!
பெங்களூருவில் கடந்த வாரம் ஒருவர் தனது செல்போன் எண்ணிற்கு சம்பந்தமே இல்லாத எண்ணில் இருந்து ஒரு ஆணின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படம் வந்துள்ளதை பார்த்துள்ளார்.
பெங்களூருவில் ஊர், ஊராக சென்று பாலியல் தொழிலில் ஈடுபட்ட தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் கடந்த வாரம் ஒருவர் தனது செல்போன் எண்ணிற்கு சம்பந்தமே இல்லாத எண்ணில் இருந்து ஒரு ஆணின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படம் வந்துள்ளதை பார்த்துள்ளார். மேலும் அந்த நபரிடம் போட்டோவை சமூக வலைத்தளங்களில் பகிராமல் இருக்க பணம் தர வேண்டும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த நபர் காவல்துறையில் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் புகைப்படம் அனுப்பிய நபரின் எண் புலகேசிநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக காட்டியது. உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கிருந்த தம்பதியினரை கைது செய்து தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுதொடர்பாக போலீசார் தரப்பில் வெளியாகியுள்ள தகவல்படி, ‘சம்பந்தப்பட்ட தம்பதிகள் இருவரும் டெல்லியில் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு குஜராத்தும், மற்றொருவருக்கு ஹரியானாவும் சொந்த ஊராகும். இவர்கள் இருவரும் ரெடிட் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் உள்ள குழுக்களில் செயல்பட்டு வந்துள்ளனர். இந்த குழுக்களில் பாலியல் விருப்பம் கொண்ட ஆண்கள், பெண்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என பலரும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
இந்த தம்பதிகளின் வேலையே, ஒவ்வொரு ஊராக பயணம் மேற்கொள்வது தான். அப்படி பயணம் மேற்கொள்வது பற்றி குழுக்களில் தகவல் அளிப்பார்கள். சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்தவுடன் அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள விரும்பும் நபர்களுடன் பணப்பேரம் நடக்கும். இதில் யார் அதிக பணத்துக்கு சம்மதிக்கிறார்களோ அவர்களை மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றில் சந்திப்பார்கள். இரு அறைகள் எடுத்து அதில் ஒரு அறை தம்பதியினர் தங்களுக்கும், மற்றொரு அறை வாடிக்கையாளர்களுக்கு தங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்ளவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஒவ்வொரு ஊரிலும் இரண்டு நாட்கள் தங்கியிருந்து இந்த தொழிலை தம்பதியினர் செய்து வந்துள்ளார்கள்.
இருவர் மீதும் ஐபிசி 383ன் கீழ் பணம் பறித்தல் மற்றும் ஒழுக்கமில்லாத செயல்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக பெங்களூரு வந்த வழக்கறிஞர்கள் தம்பதியினர் இருவரையும் ஜாமீனில் விடுவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குழந்தைகள் இருப்பதால் அவர்களை எச்சரித்து உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது’ என தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: தொழிலதிபரின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு ரூ.13 லட்சம் பணம், நகை கொள்ளை - கோவையில் பரபரப்பு