போலீஸ் கேன்டீனில் திருடிய காவலர் கைது - செல்போன்கள், டிவிக்கள் பறிமுதல்
திருவண்ணாமலை போலீசாரின் கேன்டீனில் விலை உயர்ந்த செல்போன்கள், டி.வி.க்களை திருடிய காவலரை கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி ( police canteen) இயங்கி வருகிறது. இந்த பல்பொருள் அங்காடியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறையினரும் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த கேன்டீன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பின்புறமும் அமைந்துள்ளது. போலீஸ் கேன்டீன் காலையில் திறக்கப்பட்டு மாலையில் மூடிவிட்டு காவலர்கள் செல்வார்கள். இந்நிலையில் போலீஸ் கேன்டீனை காலையில் திறந்து பொருட்களை விற்பனை செய்து விட்டு மாலையில் வழக்கம்போல் பொருட்களை சரிபார்த்து விட்டு கேன்டீனை காவல்துறை காவலர்கள் மூடிவிட்டு சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வழக்கம்போல் காலையில் தமிழ்நாடு காவலர்கள் போலீஸ் கேன்டீனை காவலர்கள் திறக்க வந்துள்ளனர். அப்போது கேன்டீன் பூட்டு உடைக்கப்பட்டு கேன்டீன் திறந்தவாறு இருந்தது. பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது காவலர்கள் உடனடியாக உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கேன்டீனில் அடிக்கி வைக்கப்பட்ட பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. அப்போது உடனடியாக காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கேன்டீனில் வேலை செய்யும் காவலர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அங்காடியில் இருந்த தனியார் நிறுவனத்தின் விலை உயர்ந்த 42 அகல டிவி ஒன்றும் மற்றும் 32 அகல டிவி இரண்டு என மூன்று எல்.இ.டி (LED TV) டிவிகள் மற்றும் விலை உயிர்ந்த செல்போன் ஆகியவைகள் திருடப்படு இருந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருடப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. பதிவு எண்களை வைத்து கண்காணித்து வந்தனர். சமீபத்தில் திருடப்பட்ட 3 செல்போன்களில் ஒரு செல்போன் சிம்கார்டு போடப்பட்டு ஆன் செய்யப்பட்டு உள்ளது. அந்த செல்போன் சென்னையில் பயன்படுத்தப்படுவதை அறிந்த திருவண்ணாமலை காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த செல்போனை பயன்படுத்தியது திருவண்ணாமலை ஆயுதப்படையில் பணியாற்றி சென்னை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட போளூரை சேர்ந்த சரத்குமார் வயது( 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சென்னை சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், செல்போன்கள் மற்றும் டி.வி.க்களை திருடியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் செல்போன்கள் மற்றும் டி.வி.க்களை பறிமுதல் செய்தனர்.