Crime: நகை வாங்கப் போன இடத்தில் நகை திருட்டு..! சென்னையைச் சேர்ந்த பணக்காரப் பெண் கைது..! சிக்கியது எப்படி?
மூணாறுவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் 5 சவரன் நகையை திருடிய சென்னையச் சேர்ந்த பணக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்
கேரளாவின் பிரபலமான சுற்றுலாத் தளம் மூணாறு ஆகும். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். மூணாறில் உள்ள ஜி.எச். சாலையில் பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது. கடந்த 16-ந் தேதி வழக்கம்போல நகைக்கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு, நகைகளை எல்லாம் கடையில் உள்ள லாக்கரில் பணியாளர்கள் எடுத்து வைத்துள்ளனர்.
அப்போது, கடையில் இருந்த நகைகளில் 2 செயின்கள் மட்டும் காணவில்லை. இரண்டு செயினும் 38 கிராம் எடை கொண்டது. அதாவது சுமார் 5 சவரன் எடை கொண்ட தங்க சங்கிலிகள். இதையடுத்து, பதறிப்போன ஊழியர்கள் உடனே கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்தனர்.
அப்போது, மிகவம் ஆடம்பரமாக காட்சியளித்த பெண் அன்றைய தேதியில் கடைக்கு வந்தபோது 2 செயின்களை கடை ஊழியர்களுக்கு தெரியாமல் தனது பேக்கில் திருடிச்சென்றதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து, கடை உரிமையாளர் மூணாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, டி.எஸ்.பி. மனோஜ் தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது.
போலீசார் கண்காணிப்பு கேமராக்களை கொண்டு நடத்திய விசாரணையில், அந்த பெண் ஏறிச்சென்ற வாகனத்தை விசாரித்தனர். அந்த வாகனம் சென்னையில் பதிவெண் கொண்ட பெண் என்று தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தின் எண்ணை வைத்து விசாரித்தபோது அந்த எண் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அவரது மனைவிதான் நகைகளைத் திருடிய பெண் ரகானா உசேன் பாரூக் என்றும் போலீசார் கண்டுபிடித்தனர்.
பாரூக்கின் முகவரியை கண்டுபிடித்த தனிப்படை போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர், ரகானா பாரூக்கிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் செயினை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை தனிப்படை போலீசார் கேரளாவிற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் ரகானா பாரூக் சென்னையில் நல்ல வசதியான பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், ரகானா பாரூக் நகைகளை திருடியது அவரது கணவர் உள்பட அவரது குடும்பத்தார் யாருக்குமே தெரியாது என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வசதியான பெண் மூணாறுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நகைகளை திருடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : pocso: சாத்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கணித ஆசிரியர் போக்சோவில் கைது
மேலும் படிக்க : Crime : காதலை ஏற்க மறுத்த 11ம் வகுப்பு மாணவி..! உயிருடன் எரித்துக்கொன்ற திருமணமான வாலிபர்..! ஒடிசாவில் கொடூரம்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்