மேலும் அறிய
Advertisement
முதல் நாள் ‘பார்ட் டைம்’ வேலைக்கு செல்லும்போது நேர்ந்த கொடூரம் - செல்போனால் போன கல்லூரி மாணவி உயிர்
முதல் நாள் பகுதி நேர பணிக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து சென்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாணவி
தாம்பரம் அருகே முதல் நாள் பகுதி நேர பணிக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து சென்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நிகிதா (19). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைகாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். படிக்கும் பொழுது நிகிதாவிற்கு , பணி செய்து கொண்டே படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்துள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது
இந்நிலையில் நிகிதாவிற்கு தாம்பரம் அடுத்துள்ள இரும்புலியூர் பகுதியில் செயல்பட்டு வரும் மழழையர் பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் பணி கிடைத்ததால், முதல் நாளான இன்று காலை இரும்புலியூர் அருகே செல்போன் பேசியபடி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், நிகிதா அங்கிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் நிகிதாவிற்கு கை கால் மற்றும் தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, தொடர்ந்து ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த தாம்பரம் இருப்புபாதை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்
மாணவி செல்போன் பேசிக்கொண்டே அஜாக்கிரதையாக வந்த காரணத்தினால் இந்த, விபத்து நடைபெற்றதால் மாணவி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் அஜாக்கிரதை காரணமாக மட்டும்தான் இந்த விபத்து நடைபெற்றதா அல்லது மாணவி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தாரா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி ஒருவர் தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் யாரும் இருப்புப் பாதையில் செல்லக்கூடாது என ரயில்வே போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion