மேலும் அறிய

Crime : கள்ளக்காதலியின் பெற்றோர்களை கொலை செய்த கள்ளக்காதலன்..! என்ன நடந்தது தெரியுமா..?

குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டையில் கணவன், மனைவி கழுத்து அறுத்து கொலை, இச்சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல்துறை விசாரனை

சென்னை  குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டையில் வசிப்பவர் ஆறுமுகம் ( வயது 51). இவர் குரோம்பேட்டை பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (வயது 47). இவர் கணவர் செய்யும் வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும்,  ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் 1 முதல் குறுக்கு தெருவில், சமீபத்தில் குடியேறி வசித்து வருகின்றனர்.
 
இத்தம்பதிக்கு ராஜேஷ் என்ற மகனும் வசந்தி, அமுலு என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வந்துள்ளனர். ஆறுமுகம் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் வசந்தி, சம்பத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
 
Crime : கள்ளக்காதலியின் பெற்றோர்களை கொலை செய்த கள்ளக்காதலன்..! என்ன நடந்தது தெரியுமா..?
இன்ஸ்டாகிராம் பழக்கம்
 
 இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசந்தி வசித்து வந்திருக்கிறார். இதனிடையே, வசந்திக்கு சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மோசஸ் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கம் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இதுவருக்கிடையே, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது இருவரும் சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
Crime : கள்ளக்காதலியின் பெற்றோர்களை கொலை செய்த கள்ளக்காதலன்..! என்ன நடந்தது தெரியுமா..?
 
மோசஸ் திட்டமிட்டு..
 
சமீபத்தில் குடியேறிய வீட்டிற்கு வந்த மோசஸ் வசந்தியை பார்த்து, சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 30ம் தேதி தனது 2 குழந்தைகளுடன், மாங்காட்டில் உள்ள சகோதரி அமுலு வீட்டுக்கு வசந்தி சென்றுவிட்டார். அன்றிரவு வசந்தியை தொடர்பு கொண்ட கள்ளக்காதலன் மோசஸ், நீ வீட்டுக்கு வராவிட்டால், உனது பெற்றோரை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் வசந்தி வீட்டுக்கு வராததால், நள்ளிரவு வீட்டிற்கு வந்த மோசஸ் திட்டமிட்டு தனது நண்பருடன் சேர்ந்து தம்பதி இருவரையும் கொலை செய்துள்ளார்.
 
Crime : கள்ளக்காதலியின் பெற்றோர்களை கொலை செய்த கள்ளக்காதலன்..! என்ன நடந்தது தெரியுமா..?
இரட்டை கொலை..
 
தொடர்ந்து வசந்தி தனது பெற்றோர்  செல்போன்களுக்கு தொடர்பு கொண்ட பொழுது , தொலைபேசி எடுக்காமலும் இருந்து வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பெரிய மகள் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் தனது தாய் தந்தை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். கதவு திறக்காததால் சந்தேகமடைந்து கதவு உடைத்து பார்த்தபோது வீட்டினுள் தாய் மஞ்சுளா, தந்தை ஆறுமுகம் கழுத்தறுபட்டு இறந்த நிலையில் உள்ளது தெரியவந்தது. இது குறித்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கபட்டு விரைந்து வந்த காவல்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரனை மேற்கொண்டு வந்தனர்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget