மேலும் அறிய
யார் பெரிய ரவுடி.. கட்டப்பஞ்சாயத்து செய்யப் போவது யார்.. ? ரவுடி கொலையில் அதிர்ச்சி பின்னணி
குட்டி ரவுடிகள் பெரிய ரவுடியாக நடைபெற்ற கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் சரண் அடைந்தவர்கள்
குட்டி ரவுடி..
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள , தைலாவரம் பகுதியை சேர்ந்தவர சேகர். இவரது மகன் வைகோ என்கின்ற சந்துரு (வயது 28). இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் புறநகர் பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். இதுபோக கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இவர் கொலை மற்றும் கொள்ளை ஆகிய சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மறைமலைநகர் பகுதியில் சரித்திர குற்றவாளியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலைகளில் மூன்று கொலை வழக்குகள் , ஆறு கொலை முயற்சி வழக்குகள், உட்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தவிர இவர் அதே பகுதியில், கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. பல கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய சந்துரு, தன்னை யாராவது கொலை செய்து விடுவார்களா என உயிர் பயத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட சந்துரு
இந்நிலையில் சந்துரு கடந்த 26.09.2022 ஆம் தேதி, மறைமலைநகர் அடுத்துள்ள தைலாவரம் கம்பர் தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்ற போது இருசக்கர வாகனத்தில், வந்த மர்ம கும்பல் திடீரென அவரின் வீட்டிற்குள் புகுந்துள்ளது. மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த சந்துருவை மனைவி முன்பே தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது.

கணவரை வெட்ட வந்த நபர்களை தனது உயிரை பனையம் வைத்து சந்துருவின் மனைவி வினிதா காப்பாற்ற முயன்று உள்ளார். அப்பொழுது, அந்த கொடூர கும்பல் மனைவியையும் வலது கையில் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது. உடனடியாக இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் கீதா தாம்பரம் சரக ஆணையர், சிபி சக்கரவர்த்தி வண்டலூர் சரக ஆணையர் சிங்காரவேல் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீதிமன்றத்தில் சரண்
மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், குற்றவாளிகள் தனித்தனியாக பதுங்கி இருந்தது தெரிய வந்தது. முக்கிய குற்றவாளி பூச்சி என்கின்ற ரத்தினசபாதி மற்றும் அவனது தம்பி குட்டி என்கின்ற ராகவேந்திரன் என்பவரை போலீசார் பிடிக்க ஸ்கெட்ச் போட்டு செஞ்சி மற்றும் விழுப்புரத்திற்கு விரைந்தனர்.

கூடுவாஞ்சேரி ஆய்வாளர் கீதா குட்டி என்கின்ற ராகவேந்திரன் மற்றும் விஜய் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்திருந்து விசாரணை மேற்கொண்டனர். ராகவேந்திரனை கைது செய்ததை அறிந்த கூட்டாளிகள் பூச்சி என்கின்ற ரத்ன சபாபதி விஷ்ணு சக்தி குமார் மற்றும் கோபால கண்ணன் ஆகியோர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கட்டப்பஞ்சாயத்து
சரணடைந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை கட்டப்பஞ்சாயத்து செய்து வைப்பதில், சந்துருவிற்கும் பூச்சி என்கின்ற ரத்தின சபாபதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மேலும் கஞ்சா ரவுடிசம் செய்வதில் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், சந்துரு ரத்தினசபாபதி கொலை செய்ய திட்டம் தீட்டியதாக பூச்சிக்கு தெரியவந்துள்ளது. அவரை முன்னதாகவே நாங்கள் கொலை செய்து விட்டோம், எனவும் கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துந்துள்ளனர். மேலும் தாம்பரம் அடுத்த சோமங்கலத்தில் காவலரை தாக்கிய ரவுடி சச்சின் என்பதை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர். அவருக்கும் இந்த கொலைக்கும் முக்கியம் சம்மதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion