Crime : செல்போனால் நடந்த கொடூர கொலை! ! தூங்கும்போது தலையில் கல்லைப் போட்ட நண்பர்கள்..!
சென்னை, தண்டையார்பேட்டையில் செல்போனை திருடிய வாலிபரை தலையில் கல்லைப் போட்டு நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தண்டையார்பேட்டை இளைய முதலி தெரு அருகே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழே தண்டையார்பேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த நண்பர்களான மகேஷ் ( வயது 29) மற்றும் வைரமுத்து (வயது 24) ஆகியோர் தங்கியிருந்தனர். இவர்களுடன் இவரது நண்பர் அப்பு என்பவரும் தங்கியிருந்துள்ளார். அப்பு புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்.
இவர்கள் மீது காவல் நிலையங்களில் சிறு, சிறு திருட்டு வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளது. வைரமுத்து, மகேஷ் மற்றும் அப்பு ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில், மேம்பாலத்தின் அடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது மகேஷின் செல்போனை அப்பு திருடியுள்ளார்.

தனது செல்போனை அப்பு திருடியதை கண்டறிந்த மகேஷ், அப்புவிடம் செல்போனை திருப்பித் தருமாறு கூறியுள்ளார். ஆனால், அப்புவோ செல்போனை திருப்பித் தரமுடியாது என்றும், உன்னால் என்ன செய்ய முடியுமோ என்று ஆணவமாக கூறியுள்ளார். இதனால், அப்பு மீது மகேஷ் மிகுந்த ஆத்திரத்துடன் இருந்துள்ளார்.
மேலும் படிக்க : விற்பனைக்காக வைத்திருந்த 21 கிலோ கஞ்சா... வாலிபரை வளைத்து பிடித்த தஞ்சை போலீசார்
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல மேம்பாலத்தின் கீழே இருந்த மாட்டு வண்டியில் அப்பு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, மகேஷ் மற்றும் வைரமுத்து இருவரும் அங்கே வந்துள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து மாட்டு வண்டியில் தூங்கிக் கொண்டிருந்த அப்புவின் தலையில் மிகப்பெரிய கல்லை தூக்கிப் போட்டுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த அப்பு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் கிடந்துள்ளார். மகேஷிம், வைரமுத்துவும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அப்பு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகில் இருந்த ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வைரமுத்து மற்றும் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். செல்போனுக்காக தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் மீது நண்பர்களே கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Scientist Suicide : மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் மன உளைச்சல்..! தூக்கிட்டு தற்கொலை செய்த விஞ்ஞானி..!
மேலும் படிக்க : பெற்றோரிடம் நல்ல பெயர்.. மாணவிகளிடம் சில்மிஷம்! பக்கா ப்ளானுடன் பேராசிரியர் செய்த வேலை!





















