பெற்றோரிடம் நல்ல பெயர்.. மாணவிகளிடம் சில்மிஷம்! பக்கா ப்ளானுடன் பேராசிரியர் செய்த வேலை!
திருச்சி அருகே கல்லூரி மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்த சீரழித்த பேராசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி அருகே கல்லூரி மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்த சீரழித்த பேராசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பேராசிரியர் கல்லூரி மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து சீரழித்த சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாணவிகளை தனது வலையில் வீழ்த்த பல்வேறு புதுடெக்னிக்கை பேராசியர் மேற்கொண்டு வந்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டு பணியில் சேர்ந்த பேராசிரியர், அப்போதே இருந்தே தனது காம லீலைகளை தொடர்ந்துள்ளார். கிருஷ்ணகிரியில் பணியாற்றும் போது, அங்கு இரண்டு கல்லூரி மாணவிகளை காதலித்துள்ளார்.
இதில், தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த் இரண்டு மாணவிகளில் ஒரு மாணவியை திருமணம் செய்து கொண்டு திருச்சிக்கு வந்துள்ளார். பேராசிரியரின் நடத்தை பிடிக்காமல், அவரது காதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றார். இதையடுத்து காம லீலை முழு நேர வேலையாக செய்ய ஆரம்பித்துள்ளார்.
பிளஸ் 2 முடித்து கல்லூரிக்கு முதலாமாண்டு சேரும் மாணவிகளின் விண்ணப்பங்களை முழுவதையும் பேராசிரியர் ஆய்வு செய்வார். முக்கியமாக, மாணவிகளின் முகவரியை குறித்து வைத்து கொள்வார். தொடர்ந்து, ஒவ்வொரு மாணவிகளிடமும் தங்களின் குடும்ப விவரங்களை தெரிந்து கொள்வார். இதில், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மாணவிகளுக்கு முதலில் ஸ்கெட்ச் போடுவார். அதன்படி, ஏழ்மையில் உள்ள மாணவிகளை நேரில் அழைத்து, உனக்கு மற்றும் உனது குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை செய்து தருகிறேன் எனக்கூறி, மாணவிகளின் பெற்றோர் தொலைபேசி எண்களை வாங்கி விடுவாராம்.
தொடர்ந்து, பெற்றோருக்கு போன் செய்து, அவர்களை நேரில் சந்தித்து நல்ல பெயர் எடுப்பதற்காக பண உதவி செய்வார். இதனால் பெற்றோருக்கு பேராசிரியர் மீது நம்பிக்கை ஏற்பட்டு விடும். அதன்பின்னர், மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி தனது வலையில் வீழ்த்தி உள்ளார். இதில், சில மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற போது, அவருக்கு மாணவிகள் அடியும் கொடுத்துள்ளனர். பின்னர், அந்த மாணவிகளை கண்டு கொள்ளமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
பல முறை சிக்கியபோதும், அவர் நேரிடையாக பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்று, மாணவியின் பெற்றோர் காலில் விழுந்து, 'மன்னித்து விடுங்கள்' எனக்கூறி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
கடந்த காலங்களில் பாலியல் குற்றச்சாட்டில் பலமுறை பேராசிரியர் சிக்கி, அதிலிருந்து அவர் தப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளதால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியர் தற்போது மருத்துவ விடுப்பு எடுத்து தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முக்கியமாக, திருச்சி பேராசிரியர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.