சென்னை கிரைம்: அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி; தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்
நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

அடுக்குமாடி குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த பெண்
சென்னை மயிலாப்பூரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 25 வருடங்களாக 55 வயது பெண்மணி வீட்டு வேலை செய்து கொண்டும் , இவரது கணவர் வாட்ச்மேனாக வேலை செய்து கொண்டும், இருவரும் அங்கேயே தங்கி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த போது, அதிகாலையில் ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து , அங்கு தூங்கி கொண்டிருந்த பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார்.
காவல் துறையினர் விசாரணை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி கொடுத்த புகார் மீது E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். E-1 மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் தொடர்புடைய செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த சண்முகம், ( வயது 60 ) என்பவரை கைது செய்தனர்.
செல்போன் திருடிய குற்றவாளி
விசாரணையில் , அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து செல்போன் திருடியதும், பின்னர் புகார்தாரரின் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்து, பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 1 செல்போன் மற்றும் 1 சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சண்முகம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆன்லைன் மோசடியில் போலி வங்கி கணக்கு தொடங்கி சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய தம்பதி கைது. ரூ.2.30 லட்சம் மீட்பு.
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சல்மான் சலீம் ( வயது 29 ) என்பவர் நடத்திவரும் Travel Management அலுவலகத்தில் Vendor நிறுவனத்தில் இருந்து வந்திருந்த EMail ல் கொடுக்கப்பட்டிருந்த Punjab National Bank வங்கி கணக்கில் 17.07.2025 அன்று பணம் ரூ.17,72,868/- பணம் செலுத்தி விட்டதாகவும், பின்னர் Vendor நிறுவனத்தில் பணம் அனுப்பி உள்ளது குறித்து கேட்ட போது , அவர்கள் அந்த மின்னஞ்சல் முகவரி அவர்களுடையது இல்லை என்றும் மேற்படி வங்கி கணக்கும் அவர்களுடையது இல்லை என தெரிவித்துள்ளனர்.
சல்மான் சலீம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது சம்மந்தமாக ஆன்லைனில் புகார் பதிவு செய்தும் , பின்னர் மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் கடந்த 28.07.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் புலன் விசாரணை மேற் கொண்டனர்.
குற்றவாளிகள் கைது
சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் புகார் தாரர் 17.07.2025 - ம் தேதி பணம் அனுப்பிய வங்கி கணக்கானது சிவகாசியில் உள்ள Punjab National bank வங்கி கணக்கு என்பதும் , மேற்படி பணத்தினை வங்கி கணக்கிலிருந்து உரிமையாளர் காசோலைகள் மூலமாக எடுத்து விட்டதாக தெரிய வந்ததால் மேற்படி வங்கி கணக்கின் உரிமையாளர் புஷ்பா ( வயது 35 ) மற்றும் இவரது கணவர் சதுரகிரி ( வயது 41 ) ஆகியோரை காவல் குழுவினர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள வீட்டின் அருகில் வைத்து கைது செய்தனர். பணம் ரூ.2,30,000 , 2 செல்போன்கள், வங்கி பாஸ்புக் மற்றும் செக்புக் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
மேலும் விசாரணையில் புஷ்பாவை facebook மூலமாக தொடர்பு கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் Chris Otto என்ற நபர் பல கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை அனுப்புவதாகவும், அதற்கான பார்சல் கட்டணத்தை Delta Courier Service company mail Id - ல் தெரிவிப்பார்கள் என கூறியதை நம்பி எதிரிகள் இருவரும் 3 வங்கி கணக்குகளை சைபர் கிரிமினல்கள் கேட்டவாறு தொடங்கி , அவற்றை சைபர் கிரிமினல்கள் கொடுத்த புது டெல்லி முகவரிக்கு போஸ்ட் செய்தும் பின்னர் புகார் தாரர் வங்கி கணக்கில் இருந்த வந்த பணம் ரூ.17,72,868/-ஐ Self Withdrawal Cheque வழியாக எடுத்து அவற்றை சைபர் கிரிமினல்கள் கொடுத்த பல வங்கி கணக்குகளில் deposit செய்ததாகவும் மீதமிருந்த பணம் ரூ.3,67,500./- அவர்களுடைய செலவிற்கு வைத்து கொண்டது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.





















