மேலும் அறிய
சென்னை: ரயிலில் கத்தியால் தாக்கிய போதை வாலிபர்: ரத்த வெள்ளத்தில் சேஸ் செய்ய சென்ற பெண் போலீஸ் - நடந்தது என்ன?
மின்சார ரயிலில், பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.) பெண் காவலரை கத்தியால் குத்திய நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்
![சென்னை: ரயிலில் கத்தியால் தாக்கிய போதை வாலிபர்: ரத்த வெள்ளத்தில் சேஸ் செய்ய சென்ற பெண் போலீஸ் - நடந்தது என்ன? Chennai beach railway sation Stopped from entering ladies coach, man attacks RPF cop சென்னை: ரயிலில் கத்தியால் தாக்கிய போதை வாலிபர்: ரத்த வெள்ளத்தில் சேஸ் செய்ய சென்ற பெண் போலீஸ் - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/1a20f287b3c8cecb00f31b5730bab2151661391001248109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரயில்வே பாதுகாப்பு படை
சென்னை கடற்கரை ரயில் நிலையம் மிகப் பிரதான ரயில் நிலையமாக இருந்து வருகிறது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த வழித்தடம் மூலம் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்படத் தயாராக இருந்தது. இந்த ரயிலின் முன்பக்கம், பின்பக்கத்தில் தலா ஓர்ஆர்.பி.எஃப். பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
![சென்னை: ரயிலில் கத்தியால் தாக்கிய போதை வாலிபர்: ரத்த வெள்ளத்தில் சேஸ் செய்ய சென்ற பெண் போலீஸ் - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/607aaaae9b4bfd92b20f91b06cabb1e31661391215512109_original.jpg)
இந்தநிலையில் நேற்று இரவு ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீசாக பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த ஆசிர்வா (வயது 26) என்பவர் ரோந்து பணியில் இருந்தார். இரவு 8.50 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில் புறப்பட்ட தயாராக இருந்தது.
![சென்னை: ரயிலில் கத்தியால் தாக்கிய போதை வாலிபர்: ரத்த வெள்ளத்தில் சேஸ் செய்ய சென்ற பெண் போலீஸ் - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/fed9d24b502788464a94dd5fe066bf611661391234759109_original.jpg)
அப்போது மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் போதை வாலிபர் ஒருவர் ஏறி ரகளையில் ஈடுபட்டார். அவரை காவலர் ஆசிர்வா தடுத்து, "இந்தப் பெட்டியில் மகளிர் மட்டும் பயணிக்க முடியும். இதில் நீங்கள் பயணிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஆசிர்வாவின் கழுத்தில் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
![சென்னை: ரயிலில் கத்தியால் தாக்கிய போதை வாலிபர்: ரத்த வெள்ளத்தில் சேஸ் செய்ய சென்ற பெண் போலீஸ் - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/ca721db0369958b655a8e2e488cb833d1661391046688109_original.jpg)
இதற்குள் மின்சார ரயில் மெதுவாக புறப்படத் தொடங்கியது. ஆனாலும் கத்திகுத்து காயத்துடன் பெண் போலீஸ் ஆசிர்வா அவரை நடைமேடையில் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அந்த மர்ம போதை ஆசாமி தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே பலத்த காயமடைந்த பெண் போலீஸ் ஆசிர்வா மயக்கம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த ஆசிர்வாவை மீட்டு பெரம்பூரில் உள்ள ரயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![சென்னை: ரயிலில் கத்தியால் தாக்கிய போதை வாலிபர்: ரத்த வெள்ளத்தில் சேஸ் செய்ய சென்ற பெண் போலீஸ் - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/b747824521e15ab4a4ce78e18a0b500d1661391254925109_original.jpg)
பெண் போலீசை கத்தியால் குத்தி விட்டு தப்பிய போதை வாலிபர் யார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயில் நிலையம் மற்றும் அப்பகுதியில் முக்கிய சாலையில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். போதையில் இளைஞர் ஒருவர் பெண் போலீசை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
சென்னை
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion