மேலும் அறிய
IFS : தேடி வரும் வட்டிபணம்! ஒரு லட்சம் பேரிடம் வசூல்.. பல கோடிகளைத் தாண்டிய பலே மோசடி.!
தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி வசூக்க ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவனத்துக்கு உதவிய முக்கிய ஏஜென்டுகள் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
![IFS : தேடி வரும் வட்டிபணம்! ஒரு லட்சம் பேரிடம் வசூல்.. பல கோடிகளைத் தாண்டிய பலே மோசடி.! Economic Offences Wing EOW arrested one promoter of Vellore-based IFS for misappropriating over Rs 6,000 crore from the depositors IFS : தேடி வரும் வட்டிபணம்! ஒரு லட்சம் பேரிடம் வசூல்.. பல கோடிகளைத் தாண்டிய பலே மோசடி.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/17/b5f1ee07d86909b3bf2d371ef56f5c591660759678447109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லட்சுமி நாராயணன்
வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ‘இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்’ (ஐஎப்எஸ்) செயல்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, காஞ்சிபுரம் தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனம், வெளியிட்ட விளம்பரத்தில், ‘எங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் பணம் தரப்படும்’ என்று தெவிக்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட இந்த நிறுவனமானது மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதிகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
![IFS : தேடி வரும் வட்டிபணம்! ஒரு லட்சம் பேரிடம் வசூல்.. பல கோடிகளைத் தாண்டிய பலே மோசடி.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/17/6cdb6d4790327076a153beaacfe94c831660759586013109_original.jpg)
கவர்ந்திழுத்த விளம்பரம்
முதலில் இந்த நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் 8000 ரூபாய் கொடுக்கப்படும். குறிப்பாக நீங்கள் தரும் முன் பணமானது பத்திரமாக பாதுகாக்கப்படும் என கவர்ச்சிகரமாக விளம்பரத்தை செய்திருந்தனர். பொதுமக்களும் மாதம் மாதம் 8000 ரூபாய், ஒரு லட்ச ரூபாய்க்கு தருவதாக விளம்பரம் செய்திருந்தனர். இதை நம்பி அந்நிறுவனத்தில் ஒரு லட்சம் பேர் வரை முதலீடு செய்துள்ளனர்.
பூதம் போல் கிளம்பிய ஆருத்ரா
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆருத்ரா என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாக கூறி மோசடியில் சிக்கியது. அதே காலகட்டத்தில் ஐ எஃப் எஸ் நிறுவனமானது முதலீட்டாளர்களுக்கு பணம் தராமல் இருந்து வந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள், நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று வட்டி கேட்டுள்ளனர். அதற்கு நிதி நிறுவன அதிகாரிகள் சரியான பதில் தராமல் இருந்துள்ளனர் மேலும் நீங்கள் இதுகுறித்து புகார் அளித்தால் ஆருத்ரா போன்று உங்களுக்கு பணம் கிடைக்காமல், போகிவிடும் என மிரட்டியும் வந்துள்ளனர்.
![IFS : தேடி வரும் வட்டிபணம்! ஒரு லட்சம் பேரிடம் வசூல்.. பல கோடிகளைத் தாண்டிய பலே மோசடி.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/17/5ac18e66c469e40eb36f3a011677a5421660759616430109_original.jpg)
புதையல் தோண்ட.. போய் பூதம் கிளம்பிய கதையாய்...
இதைதொடர்ந்து இந்த நிதி நிறுவனத்தின் மீது வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை என பல்வேறு காவல் நிலையங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மோசடி புகார் அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்தியதில், 1 லட்சம் பேரிடம் சுமார் 6 ஆயிரம் கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றி வளைக்கும் போலீஸ்
இதையடுத்து அந்நிறுவன உரிமையாளர்கள் 4 பேர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஐஎப்எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கினர். இந்நிலையில் சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி தலைமறைவாக உள்ள ஏஜென்ட்கள் மற்றும் உரிமையாளர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இயக்குனர் மற்றும் பங்குதாரராக இருந்து வந்த காஞ்சிபுரம் பகுதியில் சேர்ந்த மின்மினி சரவணன் கைது செய்யப்பட்டார்.
![IFS : தேடி வரும் வட்டிபணம்! ஒரு லட்சம் பேரிடம் வசூல்.. பல கோடிகளைத் தாண்டிய பலே மோசடி.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/05/63bb3549317f8c16849213319b7a420c1659675910_original.jpg)
ஒரே நாளில் எட்டு கோடி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சேர்ந்த ஜெகன் என்கிற ஜெகநாதன் ஐஎஃப்எஸ் நிறுவனத்தில் மேலாளராக இருந்து வருகிறார். இவர் ஒரே நாளில் 8 கோடி ரூபாயை சென்னை சேர்ந்த குப்புராஜ் என்பவருக்கு பரிமாற்றம் செய்துள்ளார். இதன் அடிப்படையில், சென்னை ஜவகர் நகர் அருளப்பா தெருவை சேர்ந்த குப்புராஜ் என்பவரை செல்போன் சிக்னல் உதவியுடன் நேற்று முன்தினம் கைது செய்தனர். அதேபோல் ஜெகநாதனையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு ஜெகநாதன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.
![IFS : தேடி வரும் வட்டிபணம்! ஒரு லட்சம் பேரிடம் வசூல்.. பல கோடிகளைத் தாண்டிய பலே மோசடி.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/05/ef7d7d673a7da947a6c2409e82dd85971659675876_original.jpg)
வெளிவரும் உண்மைகள்
கைது செய்யப்பட்டவர்கள் இடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடு ஆவணங்கள் சிக்கி உள்ளன. சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்திலும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லட்சுமி நாராயணனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் லட்சுமி நாராயணன் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்துள்ளன.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion