மேலும் அறிய
Advertisement
'சார் ஒரு முறை உங்கள வெட்டிக் கொள்ளவா..?’ - கஞ்சா போதையில் போலீசை பட்டப்பகலில் வெட்டிய குசும்பன்..!
பட்டம் பகலில் காவல் ஒருவரை வெட்டிவிட்டு தப்பிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய காவலர் அருள் என்பவர், சீருடை இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், சுமார் ஒரு மணி அளவில் காரில் அவர் அமர்ந்திருந்த பொழுது, கஞ்சா போதையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கதவை தட்டி உன்னை ஒரு வெட்டு வெட்டி கொள்ளவா என கேட்டுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர் உடனடியாக யாருடா யாருடா நீ.. போதையில் என்ன உலறுகிறார் என கூறியுள்ளார். உடனடியாக காவலர் அருள் குரல் கொடுத்து, உன்னை என்ன செய்கிறேன் ,பார் என கேட்டு வெளியில் வந்ததை பார்த்து பயத்தில் இளைஞர் வேக வேகமாக இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் காவலர் அருள் ஆகியோர் காரில் விரட்டிச் சென்று அந்த இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர். அப்பொழுது அந்த இளைஞர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் அருள் உடைய இடது தோள்பட்டையில் வெட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத காவலர் சிறிய வெட்டு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவலர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு இளைஞரை மடக்கி பிடித்து தனது காரிலேயே செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர் செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியில் சேர்ந்த குசுமான் என்கிற சுதர்சன் வயது 19 என்பது தெரிய வந்தது. மேலும் இவர் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருடன் வேறொரு இளைஞர் வந்ததாகவும் அந்த இளைஞர் தற்போது தப்பி ஓடியதாகவும் தெரிய வந்துள்ளது. பட்டப் பகலில் 19 வயது இளைஞர் காவலரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், சீருடைய இல்லாமல் பணியில் ஈடுபட்டு வந்த தலைமை காவலரை அடையாளம் தெரியாத நபர் மிரட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து காவலர் அவரை பிடிக்கும்போது அங்கிருந்து தப்பி சென்று, வழியில் சென்ற பொது மக்களையும் வெட்டி விடுவேன் என மிரட்டி உள்ளார் . இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தலைமை காவலர் இணைந்து அவரை பிடித்தனர். இதனை அடுத்து காவலரை வெட்டி அங்கிருந்து தப்பா முயன்று உள்ளார். சாதுர்யமாக அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
அரசியல்
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion