மேலும் அறிய
பாலியல் தொல்லை: தந்தை மீது மகள் போலீசில் புகார்
தன் மீது புகார் செய்துவிடுவார்கள் என்பதற்காக முந்திக் கொண்டு குடும்பத்தார் மீது தந்தை புகார் அளித்ததாகவும் சம்மந்தப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
![பாலியல் தொல்லை: தந்தை மீது மகள் போலீசில் புகார் Chengalpattu Daughter sexual complaint against receiving father பாலியல் தொல்லை: தந்தை மீது மகள் போலீசில் புகார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/200ac9253d5fce991083e6bbcc951e1a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜோதி பிரகாசம்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த வெளிச்சை கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி பிரகாசம், இவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். மதுவிற்கு அடிமையாகிய ஜோதிப் பிரகாசம் அவ்வப்போது மனைவியை அடித்து துன்புறுத்தியதால் தன் தாய் வீட்டில் பிள்ளைகளுடன் தஞ்சமடைந்தனர்.
![பாலியல் தொல்லை: தந்தை மீது மகள் போலீசில் புகார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/6269f621ba2c160cf0d552386ecec611_original.jpg)
கடந்த சில ஆண்டுகளாகவே ஜோதி பிரகாசத்தின் மனைவி அவருடைய தாய் வீட்டிலே தொடர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிச்சை கிராமத்தில் மிகவும் நெருங்கிய உறவினர் இறுதிச் சடங்கிற்கு கலந்துகொண்ட வந்தபொழுது அப்போது உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி இங்கேயே குடும்பம் நடத்துமாறு கேட்டுள்ளனர் .உறவினர்களின் சமாதானத்தை அடுத்து மீண்டும் வெளிச்சை கிராமத்துக்கு வந்து தன் கணவன் வீட்டில் தங்கினர். இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மூத்த மகளிடம் தந்தை ஜோதிப் பிரகாசம் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
பலமுறை தடுத்தும் ஜோதி பிரகாசம் பாலியல் தொந்தரவு தொடர்ந்து அளித்ததால் சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டு அனைவரும் எழுந்தனர் . தற்காப்புக்காக பாதிக்கப்பட்ட மகன் தந்தையை அடித்துள்ளார். மேலும் அவருடைய அண்ணனும் தந்தையை தாக்கி உள்ளார். குடும்பத்தினர்கள் அனைவரும் தாக்கிய காரணத்தினால் அங்கிருந்து தப்பிய ஜோதி பிரகாசம் காலை கேளம்பாக்கம் காவல் நிலையம் சென்று சொத்துக்காக தனது மகன் ஜெகதீசன் மற்றும் மகள் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார். தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை வெளியே எப்படி கூறுவது என்று தெரியாமல் குடும்பத்தினர் தவிர்த்து வந்து உள்ளனர்.
![பாலியல் தொல்லை: தந்தை மீது மகள் போலீசில் புகார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/c4c954f16b161e8e8ab72e83d2a55e91_original.jpg)
இந்நிலையில் ஜோதிப் பிரகாசம் அளித்த புகாரில் காவல்துறையினர் வீட்டிற்கு வந்த விசாரித்த போது தான், ஜோதிப் பிரகாசம் தான் தப்பிப்பதற்காக திட்டம் தீட்டி முன் கூட்டியே போலீசில் புகார் அளித்தது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தந்தை அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்ற ஜோதி பிரகாசத்தின் மகள், தன் தந்தை பாலியல் கொடுமை செய்ததால் தான் நாங்கள் விரட்டினோம் என நடந்ததை கூறி புகார் அளித்தார்.
காவல் நிலையத்தில் அவர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரை பெற்றுக் கொள்ளாததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செல்பேசியில் பேசிய பிறகு காவல்நிலையத்தில் புகார் பெற்றுக் கொள்ளப்பட்டது . தனது தந்தை ஜோதி பிரகாசம் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த மகள், உயர் நீதிமன்ற நீதிபதி, முதலமைச்சர் தனிப்பிரிவு , காவல்துறை தலைவர் என அனைவருக்கும் புகார் மனு அனுப்பி நீதி கேட்டு உள்ளார். மேலும் மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு வலுக்கட்டாயமாக செயல்பட்டதாக அவரது அப்பா மீது புகார் அளித்துள்ளார். அப்பா என் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றதாகவும், 3 ஆண்டுகளுக்கு முன்பும் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளதாக மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
![பாலியல் தொல்லை: தந்தை மீது மகள் போலீசில் புகார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/7bf62b5b9e117c611c846abb05bed2ff_original.jpg)
இது குறித்து மாமல்லபுரம் மகளீர் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அம்மா லோகநாயகி உள்ளிட்டவர்களிடம் நேற்று விசாரணை மேற்கொண்டுள்ளார். பாலியல் தொந்தரவு அளித்ததாக தந்தை மீதே மகள் புகார் மனு அளித்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பட்ஜெட் 2025
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion