மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

’ஓய்வு பெறும் ஷகில் அக்தர் ஐபிஎஸ்’ அடுத்த CBCID இயக்குநர் யார்..?

'சிபிசிஐடி இயக்குநர் ஷகில் அக்தர் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய இயக்குநராக யாரை தமிழக அரசு நியமிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது’

சிபிசிஐடி டிஜிபியாக உள்ள ஷகில் அக்தர் ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், பல்வேறு முக்கியமான வழக்குகளை விசாரித்துவரும் சிபிசிஐடி போலீசாருக்கு புதிய தலைவராக யார் நியமனம் செய்யப்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு காவல்துறை வட்டாரத்தில் எகிறியுள்ளது.’ஓய்வு பெறும் ஷகில் அக்தர் ஐபிஎஸ்’ அடுத்த CBCID  இயக்குநர் யார்..?

சிறப்பு பிரிவுகளில் முக்கியமான சிபிசிஐடி

தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கை தவிர்த்து பல்வேறு சிறப்பு பிரிவுகள் உள்ளன. உதாரணமாக, ஆயுதப்படை பிரிவு, கடலோர காவல்படை, குற்றப்பிரிவு, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு, சைபர் க்ரைம், சீருடை பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்பு படை உள்ளிட்ட பல பிரிவுகள் அதற்கென தனி ஐ.பி.எஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை தலைமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ’ஓய்வு பெறும் ஷகில் அக்தர் ஐபிஎஸ்’ அடுத்த CBCID  இயக்குநர் யார்..?

ஓய்வு பெறும் ஷகில் அக்தர் - புதிய டிஜிபி யார் ?

அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு பிரிவு சிபிசிஐடி என்ற மாநில அரசின் சிறப்பு குற்ற புலனாய்வு துறை. தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையால் மேல் விசாரணை செய்ய முடியாத வழக்குகள் / பிரச்னைக்குரிய வழக்குகள் / முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ்க்கு மாற்றப்படுவது வழக்கம். அந்த பிரிவிற்கு அனுபவமும் திறமையும் வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரியே இதுவரை டிஜிபியாக நியமிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், தற்போதைய டிஜிபியாக இருக்கும் ஷகில் அக்தர் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், சிபிசிஐடி போலீஸ்க்கு புதிய டிஜிபியாக யாரை தமிழ்நாடு அரசு நியமிக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்
சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்

சிபிசிஐடியை பொறுத்தவரை, இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது. முதல் பிரிவை பொறுத்தவரை, ஆயுதங்கள், வெடிபொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது, சர்வதேச குற்றவாளிகள் தொடர்புடைய வழக்குகள், மோசடி, போதை பொருட்கள் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான வழக்குகள் கையாளப்படுகிறது. இரண்டாவது பிரிவில் கொலை, கொள்ளை, திருட்டு, அரசியல் ஆதாய குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.  தற்போது தமிழ்நாட்டில் மிக முக்கியமான வழக்குகளை கையாண்டு வரும் சிபிசிஐடி போலீசாருக்கு தலைவராக நியமிக்கப்படப்போகும் நபர் யார் என்ற கேள்வி காவல்துறை வட்டாரங்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது.

இறுதிப்பட்டியலில் இரண்டு அதிகாரிகள்

அந்த வகையில், இந்த பொறுப்புக்கு அபய்குமார் சிங் ஐபிஎஸ், மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் ஆகிய இருவரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இருவரில் ஒருவர் சிபிசிஐடி தலைவராக நியமிக்கப்படவிருப்பதாகவும் டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏடிஜிபி அபய்குமார் சிங் IPS
ஏடிஜிபி அபய்குமார் சிங் IPS

தற்போது அபய்குமார் சிங் ஆயுத படைபிரிவு ஏடிஜிபியாகவும், மகேஷ்குமார் அகர்வால் குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும் உள்ளனர். சிபிசிஐடி இயக்குநர் பதவி டிஜிபி அந்தஸ்தில் இருப்பவரே நியமிக்க முடியும் என்றாலும் இந்த இருவரும் ஒரு சில மாதங்களில் டிஜிபி அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்படவிருப்பதால், இருவரில் ஒருவர் சிபிசிஐடி இயக்குநராக நியமிக்கப்படுவது உறுதி என டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்

அதனடிப்படையில், தற்போது ஆயுதபடைப்பிரிவு ஏடிஜிபியாக இருக்கும் அபய்குமார் சிங்கிற்கு சிபிசிஐடி இயக்குநர் ஆகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கரூர் காகித நிறுவன கண்காணிப்பு அதிகாரி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி என்று அதிமுக்கியமற்ற துறைகளை கவனித்து வந்த அபய்குமார் சிங்கை சிபிசிஐடி இயக்குநராக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ்குமார் அகர்வாலும் இந்த போட்டியில் இருந்தாலும் விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Auction 2025 LIVE: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Auction 2025 LIVE: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Embed widget